Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிக டெஸ்ட் விக்கெட்கள் பட்டியல்.. முதல் இடத்தை பிடிக்க அஸ்வின் மெகா பிளான்.. முதல் இடத்தில் யார்?

சென்னை : அதிக டெஸ்ட் போட்டி விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார் என்பதால் அதற்குள் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது அனில் கும்ப்ளே. அவர் 619 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அஸ்வின் 499 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். மூன்றாம் இடத்தில் இருப்பது ஹர்பஜன் சிங் அவர் 417 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

India vs England : Ravichandran Ashwin plans reach number 1 test bowler in India

இந்த பட்டியலில் அனில் கும்ப்ளேவை முந்தி இந்திய அளவில் முதல் இடத்தை பெற வேண்டும் என்றால் அஸ்வின் இன்னும் 121 விக்கெட்களை வீழ்த்த வேண்டும். தற்போது அவருக்கு 37 வயதாகும் நிலையில், அவர் இன்னும் ஓராண்டுக்குள் அதை செய்து முடிக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமா?

இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 499 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் அஸ்வின், அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 5 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அதன்படி பார்த்தால் அஸ்வின் இன்னும் 24 டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் அனில் கும்ப்ளே சாதனையை முந்த வாய்ப்பு உள்ளது என எடுத்துக் கொள்ளலாம்.

இந்திய அணி இந்த ஆண்டு இன்னும் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அந்த 13 போட்டிகளிலும் அஸ்வின் இடம் பெற்றாலும் கூட அவர் அடுத்த ஆண்டும் 11 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றால் தான் கூடுதலாக 121 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, அஸ்வின் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆட தன்னை தயார் நிலையில் வைத்திருக்க திட்டமிட்டு இருக்கிறார். ஒரு டெஸ்ட் போட்டிக்கு 5 விக்கெட் என்பது வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்தே சொல்லப்பட்ட கணக்கு தான். இந்திய மண்ணில் அவர் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு முழுவதும் இந்திய அணி இந்திய மண்ணிலேயே டெஸ்ட் போட்டிகளில் ஆட இருப்பதால் அஸ்வின் அதிக விக்கெட்களை வீழ்த்த முடியும்.

Story first published: Wednesday, February 7, 2024, 16:40 [IST]
Other articles published on Feb 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+