For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வினால் தான் எல்லாமே மாறியது.. போட்டியை மாற்றியதே அவர்தான்.. முன்னாள் இங்கிலாந்து வீரர் அதிரடி

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 1 என கைப்பற்றியது. இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது அஸ்வின் தான் என முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறி இருக்கிறார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்தது. அப்போது அஸ்வின் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தார். அடுத்து முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது இந்திய அணி. துருவ் ஜுரேல் அபாரமாக செயல்பட்டு 7 விக்கெட் வீழ்ந்த நிலையில் அணியை மீட்டு 90 ரன்கள் குவித்தார். அவருக்கு குல்தீப் யாதவ் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து இருந்தார்.

India vs England : Ravichandran Ashwin was the turning point in 4th test says Steve Harmison

அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் அஸ்வின் 5 விக்கெட்களை சாய்த்தார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது இங்கிலாந்து அணி. அதனை அடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 5 விக்கெட்கள் இழந்து எட்டியது இந்திய அணி.

இந்த வெற்றியில் அஸ்வினுக்கு அதிக பங்கு இருப்பதாகவும்,. அவரே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் எனவும் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறி இருக்கிறார். அதே போல, துருவ் ஜுரேல் மற்றும் குல்தீப் யாதவ் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ததையும் பாராட்டினார்.

இது பற்றி அவர் பேசுகையில், "குல்தீப் மற்றும் ஜூரல் இடையே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. ஒரு கேப்டனாக ​​யாராவது சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நீங்கள் வெஸ்ட்இண்டீஸ் அஸ்வினிடம் பந்தை எறிந்தீர்கள், 'நீங்கள் ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும்' என்று கூறினீர்கள், அவர் அதை செய்தார், அவர் 5 விக்கெட்டுகளைப் பெற்றார், அவர் டக்கெட், போப் மற்றும் குறுகிய நேரத்தில் ஜோ ரூட் விக்கெட்களை வீழ்த்தினார், அதனால் இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. அந்த நிலையில் தான் போட்டி மாறியது என்று நான் நினைக்கிறேன், "என்று ஸ்டீவ் ஹார்மிசன் கூறினார்.

Story first published: Tuesday, February 27, 2024, 23:40 [IST]
Other articles published on Feb 27, 2024
English summary
India vs England : Ravichandran Ashwin was the turning point in 4th test says Steve Harmison
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+