Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுலாம் ஹெலிகாப்டர் ஷாட்டா...தோனி பார்த்தா என்ன நினைப்பாரு..தினுதினுசா முயற்சிக்கும் பண்ட் - வீடியோ

புனே: அடில் ரஷித் வீசிய பந்தை இந்திய வீரர் ரிஷப் பண்ட் வினோதமான முறையில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது பார்ப்போர்க்கு வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் வழக்கம் போல் அதிரடி காட்டி வந்த ரிஷப் பண்ட் திடீரென செய்த விஷயம் அனைவரையும், இது என்ன விளையாட்டு என யோசிக்க வைத்துவிட்டது.

பண்ட்

பண்ட்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் ஃபுல் ஃபார்மில் ரன்களை விளாசி வருகிறார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார். எனவே அவருக்கு இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டி தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டாலும் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்திற்கு பண்ட் நிரப்பப்பட்டார்.

 3வது போட்டி

3வது போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் - ஷிகர் தவான் ஆகியோர் நிதானமாக ஆடினர். இந்த ஜோடியை அடில் ரஷித் பிரித்தார். இதனால் ரோகித் சர்மா 37 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் 67 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி (7) மற்றும் கே.எல்.ராகுல் (7) சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

விநோதமான ஆட்டம்

ரிஷப் பண்ட் என்னதான் அதிரடியாக ஆடினாலும் அவரின் ஷாட்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இன்று ஒரு வினோதம் நடந்துள்ளது. 4வது வீரராக களமிறங்கிய அவர், இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். அப்போது ஆட்டத்தின் 23வது ஓவரை அடில் ரஷித் லெக் ப்ரேக்காக வீசினார். ஸ்டம்பை ஒற்றி நின்றிருந்த ரிஷப் பண்ட், இப்பந்தை வித்தியாசமாக திருப்பி ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார். அப்பந்து பவுண்டரிக்கு சென்றது.

வியந்த வீரர்கள்

வியந்த வீரர்கள்

தோனி யார்க்கராக வரும் பந்தை ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது மிகவும் ஃபேமஸ். ஆனால் பண்ட்டோ நன்றாக குத்தி பவுன்சாகி வந்த பந்தை ஹெலிகாபட்டர் ஷாட் அடித்தது, இந்திய அணி மட்டுமல்லாது எதிரணி வீரர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படியெல்லாம் ஒரு ஷாட்டா எனவும் சில வியப்புடன் பார்த்தனர்.

Story first published: Sunday, March 28, 2021, 17:13 [IST]
Other articles published on Mar 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+