For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கே உலை வைத்த அஜித் அகர்கர்.. கடுப்பான ரோஹித் சர்மா.. உள்ளே வந்த துணை கேப்டன்

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. முன்னதாக அணியின் துணை கேப்டன் பும்ராவுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தற்போது பும்ராவின் பெயரை மூன்று போட்டிகளுக்குமான அணியில் தேர்வு செய்து இருக்கிறார்.

இதன் பின்னணியில் கேப்டன் ரோஹித் சர்மா இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் அகர்கர் பும்ராவின் நிலை கருதி அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த நிலையில், இந்திய டெஸ்ட் அணி தற்போது இருக்கும் நிலையில் அது மோசமான முடிவாக இருக்கும் என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா மறுத்து இருக்கிறார்.

India vs England : Rohit Sharma wants Jasprit Bumrah to play all three test

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலாட் கோலி மொத்தமாக விலகி இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டால் மட்டுமே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நிலை உள்ளது.

இதைத் தவிர வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு போட்டியில் பங்கேற்று அதில் சரியாக பந்து வீச முடியாமல், விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர். இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களும் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இப்படி இந்திய அணியில் பல்வேறு பின்னடைவுகள் இருக்கும் நிலையில், அணியின் துணை கேப்டனும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணமானவருமான பும்ராவுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளித்தால் நிச்சயம் அது மனதளவில் இளம் இந்திய வீரர்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, பும்ராவை கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.

Story first published: Saturday, February 10, 2024, 12:21 [IST]
Other articles published on Feb 10, 2024
English summary
India vs England : Rohit Sharma wants Jasprit Bumrah to play all three test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+