For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

19 வயதில் சச்சின் செய்த மாஸ் சம்பவம்.. சென்னையில் அப்போவே இங்கிலாந்தை ஓடவிட்ட குட்டி டெண்டுல்கர்

IND VS ENG :IND vs ENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் 1993 சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் கூச், உடல் நலம் சரியில்லாததால் அலெக் ஸ்ர்டெவார்ட் இந்த டெஸ்ட் மேட்ச் கேப்டன்.

அறிமுக வீரர் ரிச்சர்ட் ப்ளாக்கே விக்கெட் கீப்பிங் செய்தார்.இந்த சம்பவம் நடைப் பெற்றது 1993 சென்னை டெஸ்டில் ( 11 - 15, பிப்ரவரி).மூன்று சதங்கள். நவ் ஜோத் சிங் சித்து 106,சச்சின் டெண்டுல்கர் 165,கிறிஸ் லெவிஸ் 117.அணில் கும்ளே 8 விக்கெடுக்கள் (2 - 61. & 6 - 64)

India vs England - sachin tendukar hits 165 runs in 1993 Chennai Test

வெங்கட பதி ராஜு 6 விக்கெடுக்கள் (4 - 103. & 2 - 76) அசாருத்தின், டெண்டுல்கர், டபுள்யு வி ராமன் ( 12 வது வீரர்) தலா 2 கேட்சுக்கள் பிடித்தனர். இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்சிலும் பேடடிங் விளையாடியது.இந்த டெஸ்டில் பூஜ்ஜிய ங்கள் மொத்தம் 6.
அவற்றைத் தவிர எடுக்கப் பட்ட ரன்களில் சில 6 , 26 , 56 , 66 , 106

இங்கிலாந்து அணி மொத்தம் வீசியது 165 ஓவர்கள்.

இந்திய அணி
127. 3 ஓவர்கள்
81. 1 ஓவர்கள்

முதலில் பே ட்டிங் விளையாடிய இந்திய அணி, முதல் விக்கெட் இழந்தது. மனோஜ் பிரபாகர் 27 ரன்கள். 41 - 1வினோத் காம்ளி , சித்து ஜோடி நன்றாக ஆடினார்கள். 100 ரங்களுக்கு மேல் குவித்தனர். 64 பந்துக்கள் எதிர் கொண்ட வினோத் காம்ளி அவுட். LBW ஹிக்.ரன்கள் 59. 149 - 2.

சித்துவும், டெண்டுல்கரும் சேர்ந்து ஆடினார்கள் இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் எவ்வளவு முயன்றும் முடியவில்லை.சித்து தனது சதத்தை அடித்தார். டெண்டுல்கர் தனது அரை சதத்தை முடித்தார்.

இருவரும் நின்று, நிதானமாகவும், அணியின் தேவைக்கு ஏற்பவும் ஆடிக் கொண்டு இருந்தனர்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி ஸ்கோர் 275 / 2.
சித்து 104*
டெண்டுல்கர் 70*

இருவரும் 135 ரன்கள், ஸ்கோரில் உயர்த்தினர்.
சித்து ஜார்விஸ் வீசிய பந்தில் , ஹிக் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார்.
எதிர் கொண்ட பந்துக்கள் 273 ( 9 x 4 )
ரன்கள் 106
296 - 3

அசாருதின் அவுட். ரன்கள் 6. சதம் அடித்த டெண்டுல்கர் தனது அருமையான ஆட்டத்தை தொடர்ந்தார்.அவருக்கு கம்பெனி கொடுத்தது, பிரவின் அம்ரே.
165 ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் சலீஸ்பரி போட்ட பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்.

296 பந்துக்கள் ஆடினார். ( 24 x 4 & 1 x 6 )
442 - 5

பிரவின் அம்ரே, கபில் தேவ் இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

குறிப்பாக கபில் தேவ் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆடினார்.

இந்த ஜோடி சேர்த்தது 57 ரன்களை.

78 ரன்கள் எடுத்த அம்ரே,
ஜார்விஸ் கேட்ச் பிடிக்க சலீஸ்பரி பந்தில் அவுட்.

154 பந்துக்கள் ஆடினார். ( 8 x 4 & 1 x 6 )
499 - 6

500 ரன்களை கடந்து இந்திய அணி வீரர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
களத்தில் வந்த கிரண் மோரே தன் பங்கிற்கு ரன்கள் குவிக்க தொடங்கினார்.
560 ரன்களுடன் 6 விக்கெட்டு கள் இழப்பிற்கு, அணி தங்கள்முதல் இன்னிங்க்சை முடித்துக் கொண்டனர்.

கபில் தேவ் 66 *
கிரண் மோரே 26 *

உபரி ரன்கள் 27

இங்கிலாந்து அணியில் 6 பவுலர்கள் பவுலிங் செய்தனர். நான்கு வீரர்கள் விக்கெட்டுக்கள் எடுத்தனர்

பால் ஜார்விஸ் 2 - 72
கிறிஸ் லெவிஸ் 1 - 40
கிரேீமே ஹிக் 1 - 77
இயன் சலீஸ்பரி 2 - 142

தேவோன் மால்கம் 87,
பில் தூபினல் 132 ரன்களும் கொடுத்தனர், விக்கெட்டுக்கள் எடுக்காமலேயே.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங் துவக்கிய இங்கிலாந்து அணி 46 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தனர்.
ராபின் ஸ்மித் LBW கும்ளே. ரன்கள் 17.

கேப்டன் அலெக் ஸ்டெவார்ட் மற்றும் ஹிக் இருவரும் பொறுமையாகவும், பொருப்புடனும் விளையாடினார்கள்.

இருவரும் சேர்ந்து 111 ரன்கள் உயர்த்தினர்.

ஹிக் LBW சவுகான்.
ரன்கள் 64. பந்துக்கள் 122. ( 11 x 4 )
157 - 2

அலெக் ஸ்டெவார்ட் எடுத்தது 74 ரன்கள்.
பந்துக்கள் 269. ( 8 x 4 )

ராஜுவின் பந்தில், டபுள்யு வி ராமன் கேட்ச் பிடித்தார்.
179 - 5

இந்த ஜோடியினரை தவிர நெயில் பெர்பிரதர் என்ற வீரர் மிக சிறப்பாக ஆடினார். இவர் எடுத்த ரன்கள் 83.

பந்துக்கள் 159 ( 10 x 4 & 1 x 6 )
279 - 9

மற்ற வீரர்கள் ஒற்றைப் பட ரன்களில் அவுட்.

இங்கிலா ந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 286.

உபரி ரன்கள் 32.

ஸ்பின் பவுலர்கள் மூவரும் இங்கிலாந்து அணியின் விக்கெடுக்களை பங்கு போட்டுக் கொண்டனர்.

அணில் கும்ளே 2 - 61
ராஜேஷ் சவுகான் 3 - 69
வெங்கட பதி
ராஜு 4 - 103

பால்லோவ் ஆன் பெற்ற இங்கிலாந்து அணி அவர்களது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை துவக்கியது.

100 ரன்கள் எட்டுவதற்குள் 6 விக்கெடுக்களை இழந்து விட்டனர் இங்கிலாந்து அணி.

அலெக் ஸ்டெவார்ட் 0
ஹிக் 0
காட்டிங் 19
ஸ்மித் 56
ப்ளாக்கே 6
பெர்பிரதர் 9

10 - 1 , 12 - 2 , 71 - 3 , 82 - 4 , 88 - 5 , 99 - 6

சலீஸ்பரி 12
பால் ஜார்விஸ் 2
கிறிஸ் லெவிஸ் 117
தேவோன் மால்கம் 0

உபரி ரன்கள் 9

ஆல் அவுட் 252

இரண்டாவது இன்னிங்சில் மிக சிறப்பாக பேட்டிங் செய்தவர்கள் ராபின் ஸ்மித்தும், கிறிஸ் லெவிசும். பில் தூபினெல் தாக்கு பிடித்து ஆடினார் .
மற்ற ஆட்டக்காரர்கள் ஆட்டம் சுமாராக தான் இருந்தது.இரண்டு இன்னிங்சிலும் இந்திய ஸ்பின் பவுலர்கள் தங்கள் திறமையான பவுலிங்கை பதிவு செய்தனர்.
பெரும் பாலான இங்கிலாந்து வீரர்கள் இந்திய ஸ்பின் பவுலிங்கை எதிர் கொள்ள முடியாமல் இருந்தனர்.

சதம் பதித்த கிறிஸ் லெவிஸ், தனது அதிரடி ஆட்டத்தை நன்கு கையாண்டார்.

பந்துக்கள் 140. ( 15 x 4. & 2 x 6 )

இந்திய அணி பவுலிங்

கபில் தேவ் 2 - 36
ராஜு 2 - 76
சவுகான் . 0 - 59
கும்ளே 6 - 64

சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகர்.இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வாசுதேவன்,பெங்களூரு

Story first published: Monday, March 4, 2024, 23:41 [IST]
Other articles published on Mar 4, 2024
English summary
India vs England - sachin tendukar hits 165 runs in 1993 Chennai Test 19 வயதில் சச்சின் செய்த மாஸ் சம்பவம்.. சென்னையில் அப்போவே இங்கிலாந்தை ஓடவிட்ட குட்டி டெண்டுல்கர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+