Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெகா சாதனை.. சுப்மன் கில் ரெக்கார்டுக்கு வேட்டு வைத்த சர்பராஸ் கான்.. அறிமுகமான உடன் அதிரடி

ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார் சர்பராஸ் கான். அவர் அறிமுகமான உடன் சக இந்திய வீரர் சுப்மன் கில்லின் டெஸ்ட் சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார். மேலும், சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டு இருக்கிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக முதல் தர டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார் சர்பராஸ் கான். அதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறந்த பேட்டிங் சராசரி வைத்துள்ளார். எனினும், இத்தனை ஆண்டுகள் கழித்து அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. டெஸ்ட் அணி ஜாம்பவான் அனில் கும்ப்ளே கையால் டெஸ்ட் தொப்பியை வாங்கினார் சர்பராஸ் கான்.

 India vs England : Sarfaraz Khan breaks Shubman Gill record in batting average on debut

இந்த அறிமுகத்தின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆகும் போது அதிக முதல் தர டெஸ்ட் சராசரி வைத்திருந்த வீரர்கள் வரிசையில் சுப்மன் கில்லை முந்தி ஆறாவது இடத்தை பிடித்துள்ளார் சர்பராஸ் கான். அதே சமயம் ஜெய்ஸ்வால் இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் அணி அறிமுகத்தின் போது முதல் தர கிரிக்கெட்டில் அதிகபட்ச பேட்டிங் சராசரி கொண்ட வீரர்கள் -

88.37 - வினோத் காம்ப்ளி - 27 போட்டிகள்
81.23 - பிரவீன் ஆம்ரே - 23 போட்டிகள்
80.21 - யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 15 போட்டிகள்
71.28 - ருசி மோடி - 38 போட்டிகள்
70.18 - சச்சின் டெண்டுல்கர் - 9 போட்டிகள்
69.85 - சர்பராஸ் கான் - 45 போட்டிகள்
68.78 - சுப்மன் கில் - 23 போட்டிகள்

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கும், சர்பராஸ் கானுக்கும் 0.33 என்ற அளவில் தான் பேட்டிங் சராசரியில் வித்தியாசம் உள்ளது. அதே சமயம், சுப்மன் கில்லையும் சிறிய வித்தியாசத்தில் முந்தி இருக்கிறார் சர்பராஸ் கான். ஜெய்ஸ்வால் தன் டெஸ்ட் அறிமுகத்தின் போது 15 போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்ததால் அப்போது அவரது சிறந்த ஃபார்மின் காரணமாக அவரது பேட்டிங் சராசரி அப்போது 80 ஆக இருந்தது.

Story first published: Thursday, February 15, 2024, 10:49 [IST]
Other articles published on Feb 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+