Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ரன்னில் போச்சே.. வாய்ப்பை கோட்டை விட்ட துருவ் - சர்பராஸ்.. பறிபோன மெகா ரெக்கார்டு வாய்ப்பு

ராஜ்கோட் : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சவுரவ் கங்குலி - ராகுல் டிராவிட் இணைந்து செய்த அரிய சாதனை ஒன்றை முறியடிக்கும் வாய்ப்பு சர்பராஸ் கான் - துருவ் ஜுரேலுக்கு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை 4 ரன்களில் நழுவ விட்டார் துருவ் ஜுரேல்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் அறிமுகம் ஆனார்கள். இந்திய டெஸ்ட் அணியில் ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள் அறிமுகம் ஆவது என்பது மிகவும் அரிதாக நடக்கும் செயல். அதிலும் இருவருமே பேட்ஸ்மேன்கள் என்பது இன்னும் அரிதான ஒரு விஷயம்.

India vs England : Sarfaraz Khan - Dhruv Jurel missed 28 year old record by 4 runs

அந்த வகையில் சர்பராஸ் கான் - துருவ் ஜுரேல் அறிமுகம் இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய விஷயமாக இருந்தது. மூன்றாவது டெஸ்ட்டில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்து, 62 ரன்கள் குவித்து தன் அறிமுகப் போட்டியை மறக்க முடியாத போட்டியாக மாற்றினார்.

ஆனால், துருவ் ஜுரேல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். 4 ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இதை அடுத்து ஒரே டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன இரண்டு இந்திய வீரர்கள் அரைசதம் அடித்த சாதனையை முறியடிக்கத் தவறியது . சர்பராஸ் கான் - துருவ் ஜுரேல் ஜோடி.

1996இல் சவுரவ் கங்குலி - ராகுல் டிராவிட் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் அறிமுகம் ஆனார்கள். அந்தப் போட்டியில் அவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். அந்த 28 ஆண்டு சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை சர்பராஸ் கான் - துருவ் ஜுரேல் ஜோடி 4 ரன்களில் நழுவ விட்டது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 மற்றும் துருவ் ஜுரேல் 46 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணி இந்த பெரிய ஸ்கோரை எட்டியது. எனினும், அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்து இருக்கிறது.

Story first published: Friday, February 16, 2024, 16:47 [IST]
Other articles published on Feb 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+