Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியா... இங்கிலாந்து... ஐபிஎல் 2021... தொடர் போட்டிகள்... ரசிகர்களுக்கு கலக்கல் விருந்துதான்!

டெல்லி: ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான தொடர்கள் வரும் வெள்ளிக்கிழமை துவங்கி ஜனவரி 19ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 2021 முதல் இங்கிலாந்து தொடர் துவங்கவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியினர் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குவாரன்டைனில் வீரர்கள்

குவாரன்டைனில் வீரர்கள்

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி தற்போது குவாரன்டைனில் இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை ஒருநாள் போட்டியுடன் தொடர் துவங்கவுள்ளது.

வெள்ளிக்கிழமை துவக்கம்

வெள்ளிக்கிழமை துவக்கம்

வரும் 27ம் தேதி ஒருநாள் தொடர் துவங்கவுள்ள நிலையில் அடுத்ததாக டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. அடுத்த மாதம் 17ம் தேதி துவங்கும் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான தொடர்கள் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

இந்தியாவுடன் 3 தொடர்களில் மோதல்

இந்தியாவுடன் 3 தொடர்களில் மோதல்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியினர் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டித் தொடர்களில் இந்திய அணியுடன் மோதவுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி அறிவித்துள்ளார். முதலில் 5 டெஸ்ட் போட்டிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இது 4ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐபிஎல் 2021

முன்னதாக ஐபிஎல் 2021

இந்த தொடரை அடுத்து ஐபிஎல் 2021 தொடர் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இந்த இரு தொடர்களும் இந்திய வீரர்களுக்கு மிக சிறப்பான பயிற்சியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

Story first published: Tuesday, November 24, 2020, 18:35 [IST]
Other articles published on Nov 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+