Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘தவறை புரிந்துக் கொண்டோம், நேர்மையாக ஆடுவோம்’.. இந்தியாவை மறைமுகமாக அடித்த ஜோ ரூட்.. ரசிகர்கள் கோபம்

லண்டன்: 3வது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணியின் திட்டம் குறித்து அணி கேப்டன் ஜோ ரூட் வெளிப்படையாக பேசியுள்ளார்.

லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில், யாருமே எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்த போதும், 2வது இன்னிங்ஸில் பும்ரா - முகமது ஷமி ஜோடி இணைந்து சேர்த்த 89 ரன்கள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இங்கிலாந்துக்கு எதிராக திருப்பியது. இதுவே இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. சொந்த மண்ணிலேயே படுமோசமான தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்களே கடும் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். பழிவாங்கும் எண்ணத்தினால் இந்தியாவின் டெயில் எண்டர்ஸை கூட இங்கிலாந்தால் சமாளிக்க முடியாமல் போய்விட்டதாக ஜோ ரூட் மீதும் பெரும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அணியை 3வது டெஸ்ட் போட்டியில் எப்படியவது வீழ்த்திவிட வேண்டும் என இங்கிலாந்து முடிவுடன் உள்ளது. இதற்காக முக்கியமான 4 வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

ஜோ ரூட் பேட்டி

ஜோ ரூட் பேட்டி

இந்நிலையில் 2வது டெஸ்டில் இந்தியாவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேசியுள்ளார். அதில் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் சில நேரங்களில் கவன சிதறல்கள் ஏற்படுவது சகஜம் தான். நாங்கள் அதில் இருந்து விலகி சகஜமான கிரிக்கெட்டை விளையாட நினைக்கிறோம். நாங்கள் எப்போதுமே நேர்மையாக விளையாட தான் நினைக்கிறோம். கடந்த போட்டியில் சண்டைகள், தகராறுகள் ஏற்பட்டு கவனச்சிதறல்கள் ஏற்பட்டது.

தவறை புரிந்துக் கொண்டோம்

தவறை புரிந்துக் கொண்டோம்

சிறிய கவனச்சிதறல்களால் பெரும் இழப்பு ஏற்படும் என்பதை புரிந்துக்கொண்டோம். இந்த முறை இந்திய அணி எப்படி வேண்டுமானாலும் விளையாடட்டும். ஆனால் நாங்கள் சிறப்பான முறையில் விளையாட எதிர்நோக்கியுள்ளோம். இந்த முறை அணிக்கு கூடுதல் பலமாக டேவிட் மாலன் வரவழைக்கப்பட்டுள்ளார்.

டேவிட் மாலன்

டேவிட் மாலன்

டேவிட் மாலனால் எங்களுக்கு டாப் ஆர்டரில் மிகப்பெரும் பலம் கூடியுள்ளது. இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர் டேவிட் மாலன். டேவிட் மாலன் குறித்து ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். அவர் ஒரு அற்புதமான வீரர். எவ்வளவு பிரஷர் சூழ்நிலைகள் இருந்தாலும், வெற்றிபெற்று கொடுக்கக்கூடியவர். இந்த வாய்ப்பை ஆர் பயன்படுத்திக்கொண்டு அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கிறேன் எனக்கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 24, 2021, 20:26 [IST]
Other articles published on Aug 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+