Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது டெஸ்ட்: இந்தியாவின் ப்ளேயிங் 11.. விராட் கோலி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ‘எல்லாம் வீணா போச்சே’!

ஹெட்டிங்லி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து கேப்டன் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இந்திய டெயில் எண்டர்களான பும்ர மற்றும் ஷமி ஆகியோரின் பார்ட்னர்ஷிப் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 படு தோல்வி

படு தோல்வி

இப்போட்டியில், நான்கு நாட்களில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருந்த நிலையில் கடைசி நாளில் இந்திய டெய்ல் என்டர்ஸ் பும்ரா, ஷமி இருவரும் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இங்கிலாந்து எதிராக கடின இலக்கை நிர்ணயம் செய்தனர். இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 272 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கி, 120/10 ரன்கள் மட்டும் சேர்த்து 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்கவுள்ளது. இரண்டாவது டெஸ்டில் அபார வெற்றிபெற்றுள்ள இந்திய அணி, அடுத்த மூன்று டெஸ்ட்களிலும் சிறப்பாக விளையாடி 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

ஆனால் இங்கிலாந்து அணியும் கடும் சவால் கொடுக்க காத்துள்ளது. சொந்த மண்ணிலேயே படுமோசமான தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்களே கடும் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். எனவே இந்திய அணியை 3வது டெஸ்ட் போட்டியில் எப்படியவது வீழ்த்திவிட வேண்டும் என இங்கிலாந்து முடிவுடன் உள்ளது. இதற்காக டேவிட் மாலன் உள்ளிட்ட முக்கியமான 4 வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள்

எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள்

இதனை சமாளிக்க இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பேட்டிங்கை பொறுத்தவரை புஜாரா சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. இதே போல பந்துவீச்சில் ஜடேஜாவுக்கு பதிலாகவோ, அல்லது இஷாந்த் சர்மாவுக்கு அஸ்வின் சேர்க்கப்படுவார் என மும்முணை போட்டி நிலவி வந்தது.

கோலி அறிவிப்பு

கோலி அறிவிப்பு

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11 குறித்து கேப்டன் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி, ப்ளேயிங் 11ல் மாற்றம் கொண்டு வர எங்களுக்கு எந்த காரணமும் கிடைக்கவில்லை. அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த போட்டியில் சூப்பர் கம்பேக் கொடுத்து அசத்தினோம். எனவே வெற்றிக்கூட்டணியை கலைக்க யாராவது விரும்புவார்களா? எனத் தெரிவித்துள்ளார்.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

விராட் கோலியின் பதிலால், 3வது டெஸ்ட்டுக்கான ப்ளேயிங் 11ல் எந்தவித மாற்றமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா என 4 வேகப்பந்துவீச்சாளர்களும், சுழற்பந்துவீச்சுக்கு ஜடேஜாவும் பங்கேற்கவுள்ளனர்.

Story first published: Tuesday, August 24, 2021, 21:15 [IST]
Other articles published on Aug 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+