For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG -99 ரன்னில் அவுட்டான கங்குலி.. சதத்தை நெருங்கிய சச்சினும் அவுட்.. 600 ரன்களை கடந்த ஸ்கோர்

IND vs ENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இங்கிலாந்தில் நடைப் பெற்ற இந்த டெஸ்டில் கேப்டன் கங்குலி 159 பந்துக்களில் எடுத்த ரன்கள் 99. மூன்று சதங்கள்.

மைக்கேல் வாகன் 197
ராகுல் திராவிட் 115
வீரேந்திர ஷேவாக் 106

India vs England - sourav Ganguly and Sachin tendulkar missed century in 2002 test

கங்குலி தவிர 90 களில் அவுட் ஆன வீரர்கள்

கிரைஹ் ஒய்ட் 94
சச்சின் டெண்டுல்கர் 92

அலெக் ஸ்டெவார்ட் 87

பூஜ்ஜியம் ( 0 ) எடுத்த நால்வரும், இந்திய வீரர்கள்.

ஒரே ஒரு சிக்ஸர். அடித்தவர் கிரைஹ் ஒய்ட்.

மொத்தம் 194 பவுண்டரி கள்.
இங்கிலா ந்து 77
இந்தியா ( 1 இன்னி) 60
( 2 இன்னி) 57

இந்திய டீம் முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.துவக்கம் சரி வர அமையவில்லை.
6 ரன்கள் இருக்கும் பொழுது வாசிம் ஜாபர் ஹாகார்ட் பந்தில் அவுட் ஆனார். பூஜ்ஜியம் (0)
ராகுல் திராவிட் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேய் கேட்ச் பிடிக்க, ஹாகார்ட் பந்தில் அவுட். 34 - 2வீரேந்திர ஷேவாக், சச்சின் டெண்டுல்கர்
சேர்ந்து ஆட துவங்கினார்கள்.

இவர்கள் இருவரும் பார்ட்னெர்ஷிப்பில் 74 ரன்கள் அதிகரித்தனர்.
டெண்டுல்கர் 68 பந்துக்கள் எதிர் கொண்டு 6 பவுண்டரிகள் சப்போர்டுடன் 34 ரன்கள் எடுத்தார். கார்க் வீசிய பந்தில் அவுட். 108 - 3கேப்டன் கங்குலி, ஷேவாக் உடன் சேர்ந்து ஆட துவங்கினார்.5 பவுலர்கள் இங்கிலாந்து டீமிற்கு பவுலிங் செய்தனர்.
வீரேந்திர ஷேவாக் தனது சதத்தை பதிவு செய்தார்.

கங்குலி, பொறுப்பாகவும், பொறுமையுடனும் ஆடிக் கொண்டு இருந்தார்.
இந்த ஜோடி 71 ரங்கள் எடுத்தனர்.ஒயிட் வீசிய பந்தில்
ஷேவாக் போல்ட் ஆனார்.

183 பந்துக்கள் ஆடி இவர் எடுத்த ரன்கள் 106.
( 18 x 4 ) 179 - 4

முதல் நாள் ஆட்ட முடிவில்
210 / 4
கங்குலி 29 * வி வி எஸ் லக்‌ஷ்மண் 22 *

இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் இந்திய ன்டீம் பேட்டிங் ஆடியது.
முடிவில் ஸ்கோர் 302 / 8.

வி வி எஸ் லக்ஷ்மண்
ஐந்தாவதாக அவுட். ரன்கள் 22 ( 41 பந்துக்கள். 4 x 4 ) 218 - 5.

அடுத்த வந்த அகர்க்கர் அதிரடியாக விளையாடினார். 39 பந்துக்களில் 34 ரன்கள் குவித்தார். ( 6 x 4 ) கங்குலி, அகர்க்கர் சேர்ந்து, சேர்த்த ரன்கள் 67.
அகர்க்கர் அவுட். கேட்ச் பிடித்தது புட்சர், விக்கெட் எடுத்தது ஹார்மிசன். 285 - 6
கங்குலி, ஹர்பஜன் சிங் ஜோடி சிறிது நேரம் தொடர்ந்தனர்.

149 பந்துக்கள் எதிர் கொண்ட கங்குலி, ஸ்டெவார்ட் கேட்ச் பிடிக்க ஹாகார்ட் பந்தில் அவுட். அவர் எடுத்த ரன்கள் 68. ( 11 x 4)
295 - 8

ஹர்பஜன் சிங், சாஹீர் கான் இருவரும் இந்திய டீம் 300 ரன்கள் கடப்பதை கண்டனர். 61 ரன்கள் சேர்க்க உதவினர். ஹர்பஜன் சிங் அரை சதம் எடுத்தார். 54 ரன்கள் குவித்த அவர் ஹுசைன்னிடம் கேட்ச் கொடுத்து, ஹார்மிசன் பந்தில் அவுட். ( 10 x 4 )
356 - 9

சாஹீர் கான் 14*

இந்திய டீம் ஆல் அவுட் 357.

ஹாகார்ட் ( 4 - 105 )
ஹார்மிசன் ( 3 -57 )

கார்க், பிளின்ட்அப், ஒயிட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இங்கிலாந்து டீமின் முதல் விக்கெட்டை எடுத்தவர் நேஹரா.
ராப் கேய் அவுட். ரன்கள் 17.

56 - 1.

மைக்கேல் வாகன், மார்க் புட்சர் இருவரும் அட்டகாசமாக விளையாடினார்கள்.
இங்கிலாந்து டீம் ஸ்கோர் 200 ஐ கடந்தும்,
இந்த ஜோடியை இந்திய டீம் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை.புட்சர் அரை சதம் எடுத்தார். வாகன் சதம் எடுத்தார்.இந்திய பவுலர்கள் திணறினர்.புட்சர், திராவிட் கேட்ச் பிடிக்க, ஹர்பஜன் சிங் பந்தில் பெவிலியன் திரும்பினார். ரன்கள் 53.
( 115 பந்துக்கள். 7 x 4 )

221 - 2.

வாகன் மிகவும் சிறப்பாக ஆடிக் கொண்டே இருந்தார். ஜான் கிரவ்லே , வாகன் இருவரும் ஸ்கோரை உயர்த்தினர்.

கிரவ்லே 22 ( 3 x 4 )

272 - 4.

வாகன், ஸ்டெவார்ட் தொடர்ந்தனர்.

258 பந்துக்கள் ஆடிய மைக்கேல் வாகன் எடுத்த ரன்கள் 197.
( 23 x 4 )

அகர்க்கர்பந்தில் பட்டேல் கேட்ச் பிடித்தார். 335 - 5.கிட்ட தட்ட இந்திய டீம் ஸ்கோரை நெருங்கி விட்டனர், இங்கிலாந்து டீம்.அந்த நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் 341 / 5.
நான்காம் நாள் ஆட்டம் இங்கிலாந்து டீம் ஸ்கோர் விரு விரு என்று ஏற துவங்கியது.
ரன்கள் 400, 500, 600 ஐ கடந்தன.இங்கிலாந்து டீம் ஆல் அவுட் ஆகும் பொழுது ஸ்கோர் 617.
வெகு வேகமாக ரன்கள் அதிகரிக்க செய்தவர்கள்

ஸ்டெவார்ட் 87 ரன்கள் ( 92 பந்துக்கள் 14 x 4 )

பிளின்ட்அப் 33 ரன்கள் ( 46 பந்துக்கள் 6 x 4 )

கிரைஹ் ஒயிட் 94* ரன்கள் ( 119 பந்துக்கள் 12 x 4 & 1 x 6)

கார்க் 31 ரன்கள் ( 42 பந்துக்கள் 7 x 4 )

ஹாகார்ட் 32 ரன்கள் ( 102 பந்துக்கள் 3 x 4 )

உபரி ரன்கள் 45

ஆஷிஷ் நேஹரா 2 - 138
சாஹீர் கான் 3 - 110
அஜித் அகர்க்கர் 2 - 93
ஹர்பஜன் சிங் 3 - 175

இரண்டாவது இன்னிங்ஸ், இந்திய டீமின் ஆட்டம் சோபிக்க வில்லை, துவக்கத்தில்.
முதல் இன்னிங்சில் சதம் எடுத்த ஷேவாக் பூஜ்ஜியம் ( 0) எடுத்தார், இந்த இன்னிங்சில்.
வாசிம் ஜாபர் 5.

11 - 2

ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர் ஜோடி சேர்ந்து அருமையான ஆட்டங்களை வெளிப் படுத்தினர்.இந்த ஜோடி ஐந்தாம் நாளும் தொடர்ந்தது.
150 ரன்களை கடந்தது, இந்திய டீம். இருவரின் பேட்டுக்களிலிருந்தும் பவுண்டரிகள் பறந்த வண்ணம் இருந்தன.சச்சின் 113 பந்துக்கள் ஆடி 92 ரன்கள் குவித்தார் ( 17 x 4 )
போல்ட் வாகன்.

174 - 3

இவரும், திராவிடும் எடுத்தது 163 ரன்கள்.திராவிடும், கங்குலி வெளுத்து வாங்கினார்கள்.
இருவரும் சேர்ந்து 135 ரன்கள் எடுத்தனர்.

309 - 4

திராவிட் அவுட். ரன்கள் 115 ( 244 பந்துக்கள்.
16 x 4 )
LBW கார்க்

அடுத்து வந்த வி வி எஸ் லக்ஷ்மண் 14 ரன்கள் எடுக்க , ஒயிட் கேட்ச் பிடிக்க கார்க் பந்தில் அவுட். 339 - 5

கங்குலி, அகர்க்கர் ஜோடி தொடர்ந்தனர்.

159 பந்துக்கள் ஆடிய கங்குலி, ஹார்மிசன் பவுலிங்கில் அவுட் ஆனார். ( 13 x 4 ) 378 - 6

அகர்க்கர் அவுட் 32 ( 6x 4 )
395 - 7

இந்திய டீம் டிக்ளர் செய்தனர்.
ஸ்கோர் 424 - 8

பார்திவ் பட்டேல் 19*
சாஹீர் கான் 14*

உபரி ரன்கள் 33

இங்கிலாந்து டீம் பவுலிங்

ஹாகார்ட் (1 - 109 )
ஹார்மிசன் ( 2 -63 )
பிளின்ட்அப் ( 1 - 95)
கார்க் ( 2 - 54 )
வாகன் ( 2 - 71 )

நாட்டீங்காம், இங்கிலா ந்து

08 - 12, ஆகஸ்ட், 2002.

ஆட்ட நாயகர்
மைக்கேல் வாகன்.

மேட்ச் டிராவில் முடிந்தது.

இந்த டெஸ்ட் தவிர 1997 ஆம் வருடம் ஸ்ரீ லங்கா டீமிற்கு எதிராக நாக்பூர் டெஸ்டில் 99 ரன்களில் அவுட் ஆகி உள்ளார் கங்குலி.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Friday, February 23, 2024, 17:37 [IST]
Other articles published on Feb 23, 2024
English summary
India vs England - sourav Ganguly and Sachin tendulkar missed century in 2002 test IND vs ENG -99 ரன்னில் அவுட்டான கங்குலி.. சதத்தை நெருங்கிய சச்சினும் அவுட்.. 600 ரன்களை கடந்த ஸ்கோர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+