Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து டி20 தொடரில் பிசிசிஐ டிவிஸ்ட்.. சீனியர்களுக்கு மீண்டும் ஓய்வு..ஹர்திக் தலைமையில் திட்டம்

லண்டன்: வரும் ஜூலை 7ஆம் தேதி தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை 1ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில், அந்தப் போட்டி 5ஆம் தேதி முடிவடைகிறது.

இதனையடுத்து ஒருநாள் இடைவெளியில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இதனால், டெஸ்ட் போட்டியில் விளையாடிய சீனியர்கள் டி20 தொடரில் பங்கேற்பது கடினமாகும்.

சீனியர்களுக்கு ஓய்வு

சீனியர்களுக்கு ஓய்வு

இதனால் பிசிசிஐ புது திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி, முதல் 2 டி20 போட்டிக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜடேஜா மற்றும் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ஹ்ர்திக் பாண்டியா தலைமையில் அயர்லாந்து அணிக்கு எதிராக பங்கேற்ற வீரர்களே இந்த தொடரிலும் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இதனால் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், ஹர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு மீண்டும் களமிறங்க வாய்ப்பு எற்பட்டுள்ளது. சீனியர்கள் 3வது டி20 போட்டிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 போட்டியை தொடர்ந்து ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் ஒட்டுமொத்த சீனியர்களும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 பேருக்கு ஆபத்து

2 பேருக்கு ஆபத்து

அயர்லாந்து, இங்கிலாந்து என தற்போது மொத்தம் 5 டி20 போட்டிகள் அடுத்த 2 வாரத்தில் நடைபெறுகிறது. இதில் கிடைக்கும் வாய்ப்பை சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி ஆகியோர் பயன்படுத்தினால், அவர்களுக்கு மெயின் அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோரின் இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

முழு அணி எப்போது

முழு அணி எப்போது

இதனிடையே, டி20 உலகக் கோப்பை போட்டிக்கு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதனால், மேற்கிநிதியத் தீவுகளுக்கு எதிரான 5 டி20 போட்டி, ஆசிய கோப்பை டி20 ஆகிய தொடர்களில் இந்தியா முழு பலத்துடன் போட்டியை சந்திக்க உள்ளது.

Story first published: Tuesday, June 21, 2022, 13:52 [IST]
Other articles published on Jun 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+