வைபவ் சூர்யவன்ஷிக்கு பேட் செய்ய வாய்ப்பு தராத அபிஷேக்.. உடனே சஞ்சு சாம்சன் செய்த காரியம்
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20 மற்றும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்த சூழலில் இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி ஏழு மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த தொடரில் 15 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி, இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக அறிமுகம் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் வைபவ் சூரியவன்சி வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் வைபவ் சூரியவன்சி வயதில் மிக குறைவான வீரர் என்பதால் அவரை சக வீரர்கள் ஒரு சிறிய குழந்தை போல் நடத்துவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
மான்செஸ்டர் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது இதனைக் காண முடிந்தது. மூத்த வீரர்களான அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சஞ்சு சம்சன் ஆகியோர் அதிக நேரம் கிரிக்கெட் பேட்டிங் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தமக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதால் வைபவ் சூரியவன்சி சோகமாக ஓரத்தில் அமர்ந்திருந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் தாம் மைதானத்தில் இப்படி உட்கார்ந்து இருக்கிறோமே என்று அவர் முகத்தில் ரியாக்ஷனை காண்பித்தார். இதனை அங்கிருந்த சாம்சன் கவனித்து உடனே வைபவ் சூரியவன்சியை அழைத்து அவர் மீது தோளில் கையை போட்டு சமாதானப்படுத்தினார். கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு வரும் என்றும் அப்போது நீ எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் மைதானத்தில் இருந்து பயிற்சி செய்யலாம் என்றும் கூறினார்.
வாய்ப்பு தற்போது கிடைக்கவில்லை என்பதற்காக மனதை விட வேண்டாம். எப்போதும் போல் மகிழ்ச்சியாக இரு. இது உன் வாழ்நாளில் சிறந்த ஒரு தருணம். இதனை நீ மகிழ்ச்சியாக அனுபவி. அப்போதுதான் இந்த அனுபவம் உன் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பேட்டிங் செய்ய வலைப்பயிற்சியில் கூட வாய்ப்பு வைபவ் சூரியவன்சிக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்திய அணியில் அறிமுகமாக இன்னும் சில காலம் ஆகலாம் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

