Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs இங்கிலாந்து டி20 தொடர் நாளை தொடக்கம்.. எந்த சேனல், ஒடிடியில் காணலாம்.. அட்டவணை, நேரம்!

லண்டன்: ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2026 ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியும், ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இதில் மோதவுள்ளன. இந்த ஐந்து போட்டிகளும் இங்கிலாந்திலேயே நடத்தப்பட உள்ளன. தொடரின் முதல் ஆட்டம் ஜூலை 1, புதன்கிழமை அன்று செஸ்டர்-லே-ஸ்டிரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது.

சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்த பிறகு இந்திய அணி இந்தத் தொடரில் களம் இறங்குகிறது. மறுபுறம், 2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு இங்கிலாந்து அணி எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடவில்லை.

India and England cricket teams playing T20 series

உலகக்கோப்பையில் பெற்ற அந்தத் தோல்விக்கு பழிவாங்க இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் துடிக்கும் வேளையில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ் தனது முதல் டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும்.

அயர்லாந்துடன் தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மீது பழிபோட முயற்சி.. கம்பீர் மீது மனோஜ் திவாரி மறைமுக தாக்கு

அயர்லாந்துடன் தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மீது பழிபோட முயற்சி.. கம்பீர் மீது மனோஜ் திவாரி மறைமுக தாக்கு

இந்தியா - இங்கிலாந்து டி20 தொடர் நடைபெறும் மைதானங்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளன. தொடரின் முதல் போட்டி செஸ்டர்-லே-ஸ்டிரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்திலும், இரண்டாவது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்திலும் நடைபெறும்.

எஞ்சிய மூன்று போட்டிகள் முறையே நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ், பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மற்றும் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் ஆகிய மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டி20 போட்டிகளின் நேர விவரங்கள்

ஒன்று, மூன்று மற்றும் நான்காவது டி20 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 10:00 மணிக்குத் தொடங்கும். அதே வேளையில், இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

இரு அணிகளின் முழு விவரம்

இந்திய அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, சூர்யான்ஷ் ஷெட்ஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி.

இங்கிலாந்து அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், டாம் பான்டன் (விக்கெட் கீப்பர்), ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் கோல்ஸ், ஜோர்டான் காக்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், லியாம் டாசன், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டங், லூக் வுட்.

IND vs IRE: இந்திய அணி தோல்விக்கு பல காரணம் இருக்கு.. ஆனால் நீங்க இவரை தான் நீக்குவிங்க-ஆகாஷ் சோப்ரா

IND vs IRE: இந்திய அணி தோல்விக்கு பல காரணம் இருக்கு.. ஆனால் நீங்க இவரை தான் நீக்குவிங்க-ஆகாஷ் சோப்ரா

நேரடி ஒளிபரப்பு விவரங்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Sony Sports Network) தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், இதன் நேரடி இணைய ஒளிபரப்பை டிஸ்னி ஹாட் ஸ்டாரில் காணலாம்.

Story first published: Tuesday, June 30, 2026, 10:34 [IST]
Other articles published on Jun 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+