Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து டி20தொடர்: பரிசுத்தொகை.. பல்வேறு சாதனைகள்..தெரிந்துக்கொள்ள வேண்டிய புள்ளிவிவரங்கள் இதோ!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற 5வது டி20 போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இப்போட்டியில் வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை, சாதனைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பரிசுத்தொகை விவரம்

பரிசுத்தொகை விவரம்

  • 5வது டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமாருக்கு ஆட்ட நாயகன் விருதுடன் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
  • டேவிட் மாலன் - பட்லர் ஜோடிக்கு சிறந்த பார்ட்னர்ஷிப்பிற்கான விருதுடன் ரூ.1லட்சம் வழங்கப்பட்டது.
  • கேம் சேஞ்சர் என்ற பிரிவில் ரோகித் சர்மாவுக்கு விருது வழங்கப்பட்டு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.
  • இந்த தொடரில் மிகவும் துடிப்புடன் செயல்பட்ட கோலிக்கு ஹுண்டாய் கார் பரிசாக வழங்கப்பட்டது.

# அதே போல விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டு ரூ. 2.5 லட்சம் கொடுக்கப்பட்டது.

இந்திய அணி சாதனை

இந்திய அணி சாதனை

  • இங்கிலாந்துடனான டி20 தொடரை வென்றது இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் 6வது வெற்றியாகும். அதே போல் கடைசியாக ஆடிய 8 டி20 தொடரில் ஒன்றில் கூட தோல்வியடையவில்லை. ஒன்றில் தொடர் சமன் ஆனது.
  • இந்திய அணி நேற்றைய போட்டியில் 224 ரன்களை எடுத்தது. இந்திய அணி டி20ல் 200 ரன்களுக்கு மேல் ரன் குவிப்பது இது 18வது முறையாகும்.
  • இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் ரன்களை குவித்து அதனை வெற்றிகரமாக டிஃபெண்ட் செய்து வெற்றி பெறுவது இது 10வது முறையாகும்.
  • கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு 2 போட்டிகளுக்கு மேல் உள்ள டி20 தொடரை இங்கிலாந்து இழப்பது இது 3வது முறையாகும். இந்த மூன்றிலுமே இந்திய அணியிடம் தான் தோல்வியடைந்துள்ளது.

2 -1 vs இந்தியா : 2017

2 -1 vs இந்தியா : 2018

3 -2 vs இந்தியா : 2021

விராட் கோலி சாதனை

விராட் கோலி சாதனை

  • சர்வதேச டி20ல் விராட் கோலி 6வது முறையாக தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார். உலகில் எந்த வீரரும் இதுவரை இதை செய்ததில்லை.
  • கோலி சரவதேச டி20ல் இதுவரை 9731 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் டி20ல் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளார்.
  • இங்கிலாந்து தொடரில் கோலி 231 ரன்கள் அடித்துள்ளார். 2க்கும் மேற்பட்ட போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னர் கே.எல்.ராகுல் நியூசிலாந்துக்கு எதிராக 224 ரன்கள் அடித்திருந்தார்.
  • கோலி சர்வதேச டி20ல் இதுவரை 28 அரை சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டி20ல் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியிலில் முதல் இடம் பிடித்தார்.
  • கேப்டனாக விராட் கோலி டி20ல் 1502 ரன்களை எடுத்துள்ளார். இதனால் டி20ல் கேப்டனாக அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் ஆரோன் ஃபின்ச்-ஐ முந்தி முதலிடம் பிடித்தார்.
  • # விராட் கோலி சர்வதேச டி20ல் இதுவரை 3159 ரன்களை குவித்துள்ளார். இதுவரை எந்த வீரரும் இவ்வளவு ரன்களை அடிக்கவில்லை.
பிற சாதனைகள்

பிற சாதனைகள்

  • இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் 8 விக்கெட்களை எடுத்து இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரரானார் ஷர்துல் தாக்கூர்.
  • இந்த தொடரில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் 197 ரன்களை வாரி வழங்கியுள்ளார். சர்வதேச டி20 தொடரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரரானார் இவர். இதற்கு முன்னர் நியூசிலாந்து பவுலர் சௌதி இந்தியாவுக்கு எதிராக 187 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
  • ஜாஸ் பட்லர் அதிக சிக்ஸர் ( 10 ) அடித்த சர்வதேச தொடர் இதுவாகும்.
  • கோலி அதிக பவுண்டரிகள் (20) அடித்த சர்வதேச தொடர் இதுவாகும்.
  • சர்வதேச டி20ல் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரரானார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலன். இவர் 24 இன்னிங்ஸ்களில் இதனை செய்துள்ளார்.
  • இந்த தொடரில் அதிகபட்சமாக டேவிட் மாலன் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் 5 கேட்ச்களை பிடித்துள்ளனர்.
  • இந்த தொடரில் சிறந்த எகனாமிக்கல் பவுலர் புவனேஷ்வர்குமார் ஆவார். 5 போட்டிகளையும் சேர்த்து அவரின் சராசரி 6.39 ரன்களே ஆகும்.
Story first published: Sunday, March 21, 2021, 22:24 [IST]
Other articles published on Mar 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+