மாறப்போகும் 90 ஆண்டு வரலாறு.. ரோகித் சர்மாவுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. பயன்படுத்துமா இந்திய அணி?

பிர்மிங்கம்: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 90 ஆண்டு கால வரலாற்றை இந்திய அணி மாற்றி அமைக்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி முதல் பிர்மிங்கம் நகரத்தில் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து அணிக்காக ஆடும் 4 இந்திய வீரர்கள்.. டிராவிட்டின் சூப்பர் ப்ளான்.. காரணம் என்ன?? இங்கிலாந்து அணிக்காக ஆடும் 4 இந்திய வீரர்கள்.. டிராவிட்டின் சூப்பர் ப்ளான்.. காரணம் என்ன??

இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து டெஸ்ட்

கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாதி வேலையை முடித்துவிட்டது. 4 போட்டிகளில் 2 - 1 என முன்னிலை பெற்றது. ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டி மட்டும் தற்போது நடைபெறவுள்ளது.

90 ஆண்டு காத்திருப்பு

90 ஆண்டு காத்திருப்பு

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், இந்திய அணி பிரமாண்ட சாதனை படைத்துவிடும். இந்திய அணி முதன்முதலாக 1932ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இருந்து தற்போது வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு முறை கூட இந்திய அணி வெற்றி கண்டதே கிடையாது. கடந்த 2007ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட தொடரை கடைசியாக வென்றது.

3 முறை ஏமாற்றமே

3 முறை ஏமாற்றமே

கடந்த 90 ஆண்டுகளில் இந்திய அணி மூன்று முறை 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியுள்ளது. இதில் 1959ம் ஆண்டு தத்தா கெயிக்வாட் தலைமையிலான அணி வைட் வாஷ் ஆனது. பின்னர் 2014ல் தோனி தலைமையிலான அணி 3 - 1 என ஏமாந்தது. அதன் பின்னர் விராட் கோலி தலைமையிலும் இதே போன்ற தோல்வியையே சந்தித்தது.

ரோகித்துக்கு ஜாக்பாட்

ரோகித்துக்கு ஜாக்பாட்

இந்த நீண்ட கால காத்திருப்பை தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைவேற்ற வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக முன்னணி வீரர்களுடன் முழு பலத்தில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இன்று பயிற்சி போட்டியும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Team India 90 years record vs england ( இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் ) இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 90 ஆண்டு வரலாற்றை மாற்றவுள்ளது.
Story first published: Thursday, June 23, 2022, 15:31 [IST]
Other articles published on Jun 23, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X