Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி.. ரவிசாஸ்திரியின் உடல்நிலை.. 5வது டெஸ்ட் போட்டியில் பின்னடைவு!

லண்டன்: இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் உடல் நிலை, இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி 2வது இன்னிங்ஸில் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இங்கிலந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களை குவித்தது. இதனையடுத்து 101 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 466 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா 127 ரன்களும், கே.எல்.ராகுல் 46 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா 61 ரன்கள் விளாசினார். இதுமட்டுமல்லாமல் லோயர் ஆர்டரில் ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அரைசதம் விளாசினர். இதனால் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியும் வெற்றி பெற வலுவாக உள்ளது.

பயிற்சியாளருக்கு கொரோனா

பயிற்சியாளருக்கு கொரோனா

இதனிடையே 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் 4வது டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டத்தின் போது அவர் பங்கேற்கவில்லை.

பிசிஆர் பரிசோதனை

பிசிஆர் பரிசோதனை

இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனால் அடுத்த 10 நாட்களுக்கு ரவி சாஸ்திரி ஓட்டல் அறையில் தனிப்படுத்தப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கோலிக்கு நெருக்கடி

கோலிக்கு நெருக்கடி

ஆனால் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 10ம் தேதியன்று தொடங்கவுள்ளது. எனவே 5வது டெஸ்ட் போட்டியில் முழுவதுமாக ரவி சாஸ்திரி இருக்க மாட்டார் எனத் தெரிகிறது. விராட் கோலி மட்டுமே தனியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Story first published: Monday, September 6, 2021, 17:32 [IST]
Other articles published on Sep 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+