Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 ரன்களுக்குள் 3 விக்கெட்கள்.. ஏமாற்றம் கொடுத்த முக்கிய வீரர்.. நம்பிக்கையை இழந்த ரசிகர்கள்!

லண்டன்: 4வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 4வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

2வது இன்னிங்ஸில் 101 ரன்கள் பின்தங்கிய சூழலில் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்டத்தின் போது சிறப்பான கம்பேக் கொடுத்தது.

4ம் நாள் போட்டி

4ம் நாள் போட்டி

முதல் இன்னிங்ஸை போலவே சுலபமாக சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை மாற்றி அமைத்தது ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி. ராகுல் 46 ரன்களுக்கு வெளியேறிய போது மறுமுணையில் தூண் போல் நிலைத்து நின்ற ரோகித் சர்மா ரோகித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8வது சதத்தை பூர்த்தி செய்தார். 256 பந்துகளை சந்தித்த அவர், 127 ரன்களை சேர்த்து வெளியேறினார். மறுமுணையில் பார்ட்னர்ஷிப் கொடுத்த புஜாரா 61 ரன்களுக்கு அவுட்டானார்.

 அடுத்தடுத்து ஏமாற்றம்

அடுத்தடுத்து ஏமாற்றம்

இதனால் 3ம் நாள் முடிவில் இங்கிலாந்தை விட, 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 4ம் நாள் ஆட்டத்தில் எப்படியும் 300 ரன்களுக்கு மேல் இந்திய அணி இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது. நிதானமாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 17 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டானார்.

 மீண்டும் ஏமாற்றிய ரகானே

மீண்டும் ஏமாற்றிய ரகானே

இதற்கு பிறகு களமிறங்கிய துணைக் கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் டக் அவுட்டாகி வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். ஏற்கனவே சரியான ஃபூட் வொர்க் இல்லை என விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த ரகானே இந்த போட்டியிலும் சொதப்பியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மிடில் ஆர்டரும் சொதப்பல்

மிடில் ஆர்டரும் சொதப்பல்

மிடில் ஆர்டரில் நம்பிக்கை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா, ரஹானே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. மறுமுணையில் கேப்டன் கோலி மட்டுமே சிறப்பாக ஆடி வந்தார். ஆனால் பிரஷரின் காரணமாக அவரும், 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். மொயின் அலி பந்துவீச்சில் ஓவர்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நிலவரம்

நிலவரம்

இன்றைய நாளின் தொடக்கத்தில் 294 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 16 ரன்களுக்குள் ( 312) 3 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது. தற்போது உணவு இடைவெளி வரை ரிஷப் பண்ட் 16 ரன்களுடனும், ஷர்துல் தாக்கூர் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Story first published: Sunday, September 5, 2021, 18:44 [IST]
Other articles published on Sep 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+