Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘டீம் வொர்க்னா இது தான்’.. 4வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி.. அசுரத்தனமான கம்பேக்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் சிறப்பான கம்பேக் கொடுத்து 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

 முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

ஆட்டத்தின் முதல் நாளன்றே தடுமாறிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி மற்றும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் விளாசினர். இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் வேகமாக சரிந்ததால் 67 ரன்களுக்குள் 5 விக்கெட்கள் வீழ்ந்தது. இதன் பின்னர் வந்த ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அரைசதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினர். இதனால் அந்த அணி 291 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 101 ரன்கள் முன்னிலை பெற்றது.

2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

101 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 127 ரன்களும், கே.எல்.ராகுல் 46 ரன்களும் எடுத்தனர். பின்னர் புஜாரா 61 ரன்கள், கோலி 41, பண்ட் 50, ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள் விளாச 466 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சீட்டுக்கட்டாக சரிந்த இங்கிலாந்து

சீட்டுக்கட்டாக சரிந்த இங்கிலாந்து

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க சிறப்பாக இருந்தது. ரோரி பேர்ன்ஸ்(50) - ஹசீப் ஹமீத் (63) ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களை சேர்த்தனர். ஆனால் பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை. டேவிட் மாலன் 5 ரன்களுக்கும், ஒல்லி போப் 2 ரன்களுக்கு அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் பலமாக இருந்த பேர்ஸ்டோ, மொயின் அலி இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். கடைசியாக அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த கேப்டன் ஜோ ரூட் 36 ரன்களுக்கு நடையை கட்டினார்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

இறுதியில் இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை விழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்றது.

Story first published: Monday, September 6, 2021, 21:22 [IST]
Other articles published on Sep 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+