IND VS ENG : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த பந்தை கேட்ச் பிடித்து காரியம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி விசாகப்பட்டினத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இந்திய அணி 396 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதை அடுத்து களமிறிங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மட்டும் அபாரமாக விளையாடி 76 ரன்கள் சேர்த்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 253 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இதனை அடுத்து 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் இருந்தனர்.
ஜெய்ஸ்வால் 17 ரன்களும் ரோகித் சர்மா 13 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க கில் ஸ்ரேயாஸ் ஜோடி களத்திற்கு வந்தார்கள். ஸ்ரேயாஸ் பார்மில் இல்லாததால் முதலில் தடுமாறினார். பொறுமையாக விளையாடி ரன்களை ஸ்ரேயாஸ் சேர்த்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க வேண்டும் என டாம் ஹார்ட்லி வீசிய பந்தை இறங்கி வந்து அடித்தார். அந்த பந்து பவுண்டரிக்கு பறந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அந்த பந்தை சரியாக கணித்த படி பின்னாலே ஓடிவந்து அபாரமாக பாய்ந்து அதனை கேட்ச் பிடித்தார். இது நடப்பாண்டின் சிறந்த டெஸ்ட் கேட்ச் ஆக பார்க்கப்படுகிறது. எனினும் ரசிகர்கள் வாழ்த்தி கைதட்டினர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் கேட்சை பிடித்து விட்டு ரசிகர்களை நோக்கி ஒரு விரலை காட்டினார்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை பென் ஸ்டோக்ஸ் வெளிப்படுத்தினார். இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பென் ஸ்டோக்சின் இந்த செயலுக்கு ஐசிசி நடவடிக்கை எடுக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முதல் டெஸ்டில் பும்ரா விக்கெட் எடுத்துக் கொண்டாடிய விதத்திற்கு ஒரு அபார புள்ளியை ஐசிசி வழங்கிய நிலையில் தற்போது பென் ஸ்டோக்ஸ் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு வேடிக்கை பார்க்குமா என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.