இதற்கு ஒரு என்டே கிடையாதா??.. இந்திய ப்ளேயிங் 11ல் நீடிக்கும் 4 குழப்பங்கள்.. டிராவிட்-க்கு தலைவலி
பிர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னும் 4 கேள்விகளுக்கு இந்திய அணி விடை கண்டுபிடிக்காமலேயே உள்ளது.
இரு அணிகளும் மோதும் 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி பிர்மிங்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரையே வென்று விடலாம் என்பதால் இந்திய வீரர்கள் திவீரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது.

ஓப்பனிங் யார்?
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. எனவே அவருக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் வரவழைக்கப்பட்டுள்ளார். ஆனால் சமீப காலமாக மயங்க்கின் ஃபார்ம் சற்று மோசமாக உள்ளது. மற்றொரு புறம் பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடிய கே.எஸ்.பரத் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே ஓப்பனிங்கிற்கு இவர்களில் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் உள்ளது.

3வது பந்துவீச்சாளர்
இந்தியாவின் முதன்மை பவுலர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இருக்கின்றனர். 3வது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ் என இருவர் போட்டி போட்டு வருகின்றனர். இங்கிலாந்து களத்தில் சிராஜ் நன்கு செயல்படுவார். எனினும் ஐபிஎல் தொடரில் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை. மற்றொருபுறம் அனுபவ வீரர் உமேஷ் யாதவ் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதனால் இவர்கள் இருவரில் யார்? என்ற கேள்வி உள்ளது.

அஸ்வின் ஆடுகிறாரா?
இந்திய அணி எந்த பவுலிங் திட்டத்தில் களம் காணுகிறது என புதிராகவே உள்ளது. 3 வேகப்பந்துவீச்சாளர்கள் வந்தால், அஸ்வின் மற்றும் ஜடேஜா என 2 ஸ்பின்னர்களும் ஆடுவார்கள். ஒருவேளை 4வது வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டால், அஸ்வின் புறக்கணிக்கப்பட்டு, ஷர்துல் தாக்கூர் அல்லது பிரஷித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவர் இடம்பெறுவார்கள்.

3வது இடத்தில் யார்?
வரிசையில்


Click it and Unblock the Notifications