For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னையில் நிகழ்ந்த மாஸ் சம்பவம்.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா.. முதல் தொடரை வென்ற கதை

சென்னை : இந்திய அணி 1932 ஆம் ஆண்டுமுதல் டெஸ்ட்போட்டியில் விளையாடினாலும், சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு தான்முதல் டெஸ்டைவென்றது. ஆனால், இந்திய அணி ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராக வென்றது இல்லை. ஆனால் அப்படி பட்ட ஒரு வாய்ப்பு 1962ஆம்ஆண்டு கிடைத்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனால் சென்னையில் நடைபெற இருந்த கடைசி டெஸ்டை வென்று இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்ய வேண்டும் என்று நினைத்தது,இந்திய அணி போட்டியை வென்று தொடரை கைப்பற்ற ஆயத்தமானது. 5வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இவர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.இவர் பிற்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக வழி நடத்தியவர்.இந்திய , இங்கிலாந்து என இரண்டிலும், ஒவ்வொரு ஸ்பின் பவுலர்கள் ஒரு இன்னிங்சில் தலா 6 விக்கெடுக்களை வீழ்த்தினர்.

India vs England test - Historical series win in chennai by team india in 1962

அதில் ஒருவர் இன்னும் ஒரு இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் எடுத்து மொத்தம் இந்த மேட்சில் 10 ஆக்கினார்.எதிர் டீமில் ஒருவர் மொத்தம் 7 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தினார்.இரண்டு டீம்களிலும் அன்றைய அனுபவ, தலைசிறந்த ஆட்டக்காரர்கள் பங்கு பெற்றனர்.

ஒரு ஸ்பின் பவுலரின் அறிமுக டெஸ்ட். ஆனால், அவர் எடுத்ததோ ஓரே ஒரு விக்கெட் மட்டும்.இங்கிலாந்து அணியின் கேப்டன் இரண்டு இன்னிங்சிகளிலும் மிகவும் குறைந்த ரன்களே எடுத்தார்.இந்திய டீமில் ஒரு இன்னிங்சில் அதிக பட்ச தனி பட்ட நபரின் ஸ்கோர் 103.

இங்கிலாந்து டீமில் ஒரு இன்னிங்சில் அதிக பட்ச தனி பட்ட நபரி ன் ஸ்கோர் 73.
இந்திய வீரர் ஒருவர் பேட்டிங்கையும், பவுலிங்கையும் ஓபன் செய்தார்.
டாஸ் வென்ற இந்திய டீம் , முதலில் பேட்டிங் ஆட துவங்கியது.
இந்திய டீமின் கேப்டன் நாரி கன்ட்ராக்டர் (Nari Contractor ) சிறப்பாக ஆடி வந்தார்.

இந்திய டீமின் ஸ்கோர் 178 ரன்கள் இருந்த பொழுது, 86 ரன்கள் எடுத்த இவர் அவுட் ஆனார். (1 சிக்ஸர் 11 பவுண்டரிகள்)இங்கிலாந்தில் படித்த பொழுதே, உள்ளூர் ஆட்டங்களில ஆடி உள்ள இந்த வீரருக்கு இது மூன்றாவது டெஸ்ட் மேட்ச்.
அருமையாக ஆடினார். அட்டகாசமாக பவுண்டரிகள் அடித்தார். குறிப்பாக கவர் டிரைவ்கள். ( cover drives )

இவர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆறாவதாக, இவர் அவுட் ஆகி வெளியேறும் பொழுது, இந்திய டீமின் ஸ்கோர் 273.தனது முதல் டெஸ்ட் சதம் பதிவு செய்த இவரது பெயர் மன்சூர் அலிகான் பட்டோடி.இவர் எடுத்த ரன்கள் 103 ( 2 சிக்ஸர்கள் 16
பவுண்டரிகள்).

இவருக்கு அடுத்து அவுட் ஆனவர், சலீம் துராணி
21 ரன்கள் (277 - 7).அடுத்த ஜோடியான பாபு நட்கர்னியும், பரூக் என்ஜினீயரும் முதல் நாள் முடிவு வரை ஆடி, இரண்டாம் நாள் அவுட் ஆனார்கள்.இந்திய டீம், ஆல் அவுட் 428.

பாபு நட்கர்னி 63 (10 பவுண்டரிகள்)

பரூக் என்ஜினீயர்65 ( 11 பவுண்டரிகள்)

இங்கிலாந்து டீம் பவுலிங்

டேவிட் ஆலன் 3 - 116
பாரி நைட் 2 - 62
பார்பர் 3 - 70

இங்கிலாந்து டீமின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் எதிர் பார்த்தப்படி அமையவில்லை.
மூன்றாம் நாளில் ஆல் அவுட் ஆகிவிட்டனர், 281 ரன்களுக்கு.மைக் ஸ்மித் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகள் உதவியுடன் 73 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து டீமின் டேவிட் ஆலன் , டேவிட் ஸ்மித் தலா 34 ரன்கள் குவித்தனர்.
281 ரன்களுக்கு இங்கிலா ந்து டீம், தங்கள் முதல்
இன்னிங்சை முடித்துக் கொண்டது.

சலீம் துராணி 105 ரன்களுக்கு 6 இங்கிலாந்து டீம் வீரர்களை வீழ்த்தினார்.சந்து போர் டே 2 , ராமகாந்த் தேசாய் மற்றும் நட்கர்னியும் தலா 1 விக்கெட்டுக்களும் எடுத்தனர்.
147 ரன்கள் லீடுடன், இந்திய டீம் இரண்டாவது இன்னிங்சை துவங்கினர்.
ஆனால் நான்காவது நாள் ஆட்டத்தின் இடையே இந்திய டீம் ஆல் அவுட் ஆகி விட்டனர், 190 ரன்களுக்கு.

இங்கிலாந்து ஸ்பின் பவுலர் டோனி லாக்கின் ( Tony Lock ) அபாரமான பந்து வீச்சை, பெரும் பாலான இந்திய வீரர்களால் எதிர் கொள்ளவும், சமாளிக்கவும் முடியவில்லை.
முதல் விக்கெட் விழுந்ததும், ஆட வந்த அனுபவ ஆட்டக்காரர் நிதானமாக நின்று அருமையாக பந்துக்களை எதிர் கொண்டு கூடவே ரன்களையும் தனக்கும், டீமிற்கும் அதிகரித்து வந்தார்.

அதே சமயத்தில் எதிர் முனையில் தனது டீமின் மற்ற ஆட்டக்காரர்கள் விரைவாக அவுட் ஆகி செல்வதையும் பார்த்துக் கொண்டே, பொறுமையுடன் விளையாடி 9 வது ஆட்டக்காரராக அவுட் ஆனார், இந்திய டீமின் ஸ்கோர் 158 ஐ தொட்ட பொழுது.
இவர் பேட்டிங் செய்ய மைதானத்தில் வந்த பொழுது, இந்திய டீமின் ஸ்கோர் , 15 ரன்கள் இருந்தது. இவர் பெயர் விஜய் மஞ்சுரேக்கர். 10 பவுண்டரிகள் உதவியுடன் இவர் எடுத்தது 85 ரன்கள்.ரன் அவுட் ஆனார்.

இங்கிலாந்து ஸ்பின் பவுலர் டோனி லாக் 65 ரன்கள் விட்டு கொடுத்து 6 இந்திய டீம் விக்கெட்டுக்களை எடுத்தார். டேவிட் ஸ்மித், டேவிட் ஆலன், பீட்டர் பார்பிட் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.கடைசி இன்னிங்சை, கடினமான இலக்கை அடையை துவக்கினர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள்.இலக்கு 338 ரன்கள்.துவக்கம் அவர்களுக்கு சாதகமாக இல்லை.ஸ்கோர் போர்ட்டில் 2 ரன்கள் இருந்த பொழுது, முதல் விக்கெட்டு விழுந்து விட்டது.

ஓபனர் பீட்டர் ரிச்சர்ட்சன்
ஜெய்ஸிம்ஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட். பவுலர் தேசாய்.

இங்கிலாந்து டீம் 90 ரன் கள் இருந்த பொழுது 5 முன்னிலை, மிக முக்கியமான
பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி விட்டனர்.

முதல் விக்கெட் 2 ரன்களுக்கு விழுந்த உடன் ஆட வந்த கென் பாரிங்டான், நான்காவதாக அவுட் ஆகும் பொழுது இங்கிலாந்து டீமின் ஸ்கோர் 86.

இவர் எடுத்தது 48 ரன்கள் ( 8 பவுண்டரிகள்).

அடுத்து அதிக பட்ச
ரன்கள் எடுத்த இருவர்
பீட்டர் பார்பிட் & பாரி நைட் ( தலா 33 )

இங்கிலாந்து டீம் 209 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய டீம் பவுலிங்

சலீம் துராணி 4 - 72
சந்து போர்டே 3 - 59

இந்திய டீமின் பேட்டிங், பவுலிங்கை ஓபன் செய்தவர் ஜெய்ஸிம்ஹா.

இந்த டெஸ்டின் அறிமுக ஆட்டக்காரர், ஆப் பிரேக் பவுலர்
இ ஏ எஸ் பிரசன்னா.

இந்த டெஸ்ட் மேட்ச் நடைப் பெற்றது

10 - 15, ஜனவரி, 1962

12, ஜனவரி, 1962 ஓய்வு நாள் ( Rest Day )

அன்றைய மெட்ராஸ்
கார்ப்பரேஷன்
ஸ்டேடியம்
( Corporation Stadium )

இந்திய டீம் 128 ரன்கள் வித்தியாசத்தில், அருமையான வெற்றியை பதிவு செய்து, தொடரையும் கைப்பற்றியது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Friday, February 9, 2024, 20:52 [IST]
Other articles published on Feb 9, 2024
English summary
India vs England test - Historical series win in chennai by team india in 1962 சென்னையில் நிகழ்ந்த மாஸ் சம்பவம்.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா.. முதல் தொடரை வென்ற கதை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+