IND VS ENG : இந்த குறிப்பிட்ட தொடரில் முதல் டெஸ்ட் இங்கிலாந்து டீம் வென்றதால், இந்த இரண்டாவது டெஸ்டில், ரசிகர்கள் எதிர் பார்ப்பு அதிகம்.நான்கு இன்னிங்சில் அதிக பட்ச ரன்கள் 210.இரண்டு டீம்களிலும் சேர்த்து, அதிக பட்ச தனி வீரர் ஸ்கோர் 75 ரன்கள், ஒரு இன்னிங்சில்.
ஒரு வேக பந்து போடுகிறவரின் அறிமுக டெஸ்ட்.அவர் இந்த டெஸ்டில் மொத்தம் 6 விக்கெட்டுக்கள் எடுத்தார்.ஒரு ஸ்பின் பவுலர் மொத்தம் எடுத்த விக்கெட்டுக்கள் 9.
அடுத்தவர் எடுத்தது 7 இன்னும் ஒரு பவுலர் எடுத்தது 6
விக்கெட்டுக்கள்.

இங்கிலாந்து டீமின் இந்த வீரர் அவருடைய அறிமுக டெஸ்டில் கேப்டனாக வழி நடத்தும் வாய்ப்பு பெற்றவர்.இந்த டெஸ்ட் கடைசி வரையில் எதிர் பார்ப்பை அதிகரிக்க வைத்தது.இந்திய டீம் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்ந்து எடுத்தது.
இந்திய டீமின் ஸ்கோர் 100 ரன்களை தொட்ட சமயத்தில் டீமின் பாதி ஆட்டக்காரர்கள் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பி விட்டனர்.
ஸ்கோர் 100 - 5
வேக பந்து வீசுபவர்களும், ஸ்பின் பவுலரும் அபாரமாக பந்து வீச, இந்திய டீமின் முன்னணி வீரர்கள் பேட்டிங் செய்ய திணறினர்.ஒரு வீரர் நன்றாக நின்று விளையாடினார்.இவரை தவிர கேப்டன் பொறுப்பு உணர்ந்து அதிக பந்துக்கள் எதிர் கொண்டு ஆடி 8 பவுண்டரிகள் எடுத்து 44 ரன்கள் குவித்தார்.
அதிரடி ஆட்டத்துடன் துவங்கிய இந்திய டீமின் மொத்த ஸ்கோர் 210 உடன் முடிந்தது.
இங்கிலாந்து டீமின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம், கிட்ட தட்ட நமது இந்திய டீமின் ஆட்டத்தோடு ஒத்துப் போயிற்று.விக்கெடுக்கள் இடைவெளி விட்டு விழுந்துக் கொண்டே இருந்தன.இங்கிலாந்து டீமின்.அனுபவ வீரர்களால் கூட இந்திய டீமின் ஸ்பின் பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை.
ஒரு வழியாக 117 ரன்களை எட்டும் பொழுது இங்கிலாந்து டீம் 6 விக்கெடுக்களை இழந்து விட்டனர்.இங்கிலாந்து டீம் ஆல் அவுட் 174 ரன்கள். 36 ரன்கள் லீடுடன் (Lead ) (முன்னிலை ) இந்திய டீம் இரண்டாவது இன்னிங்ஸ் பே ட் டி ங்
ஆட துவங்கினர்.இரண்டாவது இன்னிங்சில் ஒரே ஒரு வீரர் 50 ரன்களுக்கு மேல் எடுத்தார்.
இவரும் இன்னொரு மிக சிறந்த வீரரும் நின்று ஆடி ரன்களை குவிக்க முயன்றனர்.
மற்றவர்கள் ஆட்டங்கள் சுமார் தான். அறிமுக ஆட்டக்காரரின் துல்லிய பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை.இரண்டு வீரர்கள் வெகு நேர்த்தியாக பந்து வீசினர்.
ஒருவர் 4 - 43 அடுத்தவர் 5 - 24 எடுத்து அசத்தினர்.
இங்கிலாந்து டீமின் பீல்டிங் சிறப்பாக அமைந்து இருந்தது.இந்திய டீம் ஆல் அவுட் 155.
வெற்றி பெற தேவையான 192 ரன்களை, அடையும் நோக்கத்தோடு களம் இறங்கினர்,
இங்கிலாந்து டீம்.போதிய நேரம் இருந்தது.இங்கிலாந்து டீம், முதல் நான்கு விக்கெட்டுக்களை வெகு விரைவில் இழந்தது.மிக முக்கிய ஆட்டக் காரர்கள் அவுட்.
17 - 4
இந்திய டீம் மகிழ்ச்சியில் மிதந்தது.ஆனால், இரண்டு அனுபவ ஆட்டக் காரர்கள் நின்று நிதானமாக ஆட துவங்கினர். அவர்களது ஸ்கோர் முன்னேற துவங்கியது.
இங்கிலாந்து டீமின் முதல் இன்னிங்சில் வெகு சிறப்பாக பந்து வீசி அவர்களது 10 விக்கெட்டுக்களையும் பங்கு போட்டுக் கொண்ட இந்திய டீமின் மூன்று ஸ்பின் பவுலர்கள், எவ்வளவு முயன்றும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
அவர்கள் வெற்றி அடைவதற்கான ரன்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது. பரபரப்பு கூடிக் கொண்டே சென்றது, கூடவே பதட்டமும்.
கிட்ட தட்ட இந்த ஜோடி சேர்ந்து 100 ரன்கள் குவிக்கும் சமயத்தில் ஒரு ஆட்டக்காரரை LBW முறையில் அவுட் ஆக்கினார், இந்த ஸ்பின் பவுலர்.
114 - 5
இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய வீரரையும், அதே பவுலர் அதே முறையில் வீழ்த்தினார்.
123 - 7
அறிமுக வீரர் அதிக பந்துக்களை எதிர் கொண்டு ஒரு மாதிரி தாக்குப் பிடிக்க முயற்சித்தார்.இங்கிலாந்து டீம் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
இந்திய டீமின் பவுலிங்
முதல் இன்னிங்ஸ்
பிஷன் பேடி 2 - 59
சந்திரசேகர் 5 - 65
பிரசன்னா 3 - 33
இங்கிலாந்து டீமின் பவுலிங்
முதல் இன்னிங்ஸ்
கிறிஸ் ஓல்ட் 2 - 75
பாப் காட்டம் 3 - 45
அண்டர்வுட் 2 - 43
டோனி க்ரெய்க் 1 - 13
இந்திய டீம் பேட்டிங்
முதல் இன்னிங்ஸ்
பாரூக் என்ஜினீயர் 75 (144 பந்துக்கள் 10 பவுண்டரிகள்)
அஜித் வடேகர் 44
( 84 பந்துக்கள் 8 பவுண்டரிகள்)
210 ஆல் அவுட்
இங்கிலாந்து டீம்
பேட்டிங்
முதல் இன்னிங்ஸ்
ஆலன் நாட் 35
(50 பந்துக்கள் 3 பவுண்டரிகள்)
கிறிஸ் ஓல்ட் 33*
( 90 பந்துக்கள் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர்)
டோனி க்ரெய்க் 29
( 78 பந்துக்கள் 4
பவுண்டரிகள்)
174 ஆல் அவுட்
இந்திய டீம் பேட்டிங்
இரண்டாவது இன்னிங்ஸ்
சலீம் துராணி 53
( 139 பந்துக்கள் 7
பவுண்டரிகள் 1 சிக்ஸர்)
ஜிஆர் விஸ்வநாத் 34
( 82 பந்துக்கள் 5
பவுண்டரிகள் )
155 ஆல் அவுட்
இங்கிலாந்து டீம் பேட்டிங்
இரண்டாவது இன்னிங்ஸ்
டோனி க்ரெய்க் 67
( 135 பந்துக்கள் 7
பவுண்டரிகள் )
மைக் டென்ன்ஸ் 32
( 186 பந்துக்கள் 2
பவுண்டரிகள் )
163 ஆல் அவுட்
இங்கிலாந்து டீமின் பவுலிங்
இரண்டாவது இன்னிங்ஸ்
கிறிஸ் ஓல்ட் 4 - 43
அண்டர்வுட் 1 - 36
டோனி க்ரெய்க் 5 - 24
இந்திய டீமின் பவுலிங்
இரண்டாவது இன்னிங்ஸ்
பிஷன் பேடி 5 - 63
சந்திரசேகர் 4 - 42
அறிமுக வீரர்
இங்கிலாந்து டீமின்
கிரிஸ் ஓல்ட்
இங்கிலாந்து டீமின் கேப்டன் டோனி லெவிஸ் (Tony Lewis ) இந்த சுற்றுப் பயணத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்.ஆனார், அதுவும் முதல் அறிமுக டெஸ்டிலேயே கேப்டனாக, டெல்லி டெஸ்டில். முதல் இன்னிங்சில் 0 , இரண்டாவது இன்னிங்சில் 70 *
இந்த டெஸ்ட் மேட்சில் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஜோடியான டோனி க்ரெய்க் (67 ), மைக் டென்ன்ஸ் (32 )
இருவரையும் LBW முறையில் அவுட் செய்த இந்திய டீமின் ஸ்பின் பவுலர் பிஎஸ் சந்திரசேகர் ஆவார்.
இந்த டெஸ்டில் அதிக
ரன்களை குவித்தவர்
டோனி க்ரெய்க் 96
பாரூக் என்ஜினீயர் 92
விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள்
பி எஸ் சந்திரசேகர் 9
பிஷன் பேடி 7
டோனி க்ரெய்க் 6
கிறிஸ் ஓல்ட் 6
இந்த டெஸ்ட் மேட்ச் அன்றைய கல்கத்தாவின், ஈடன் கார்டான்ஸ்.
மைதானத்தில் நடைப் பெற்றது
30.12.1972 - 04.01.1973
இந்திய டீம் 28 ரன்கள்
வித்தியாசத்தில்.வெற்றி பெற்று சாதித்தது.
வாசுதேவன், பெங்களூரு