முச்சதம் அடித்த வீரருக்கு வெறும் 6 டெஸ்டில் தான் வாய்ப்பு.. சென்னையில் சாதனை படைத்த கருண் நாயர்
IND vs ENG : சரித்திரம் படைத்த டெஸ்ட் சென்னையில் நடை பெற்றது.இந்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புதியவர்.தனது அபார ஆட்டத்தினால் எதிரணியினரை அலற வைத்தார்.
இந்த தொடரில் தான் டெஸ்ட் விளையாட வந்தார். இந்த டெஸ்டில் தான் தனது முதல் சதம் எடுத்தார்
டெஸ்ட் முடிவதற்குள் இவரது சிறப்பான ஆட்டமும், குறிப்பிட்ட சதமும் பிரபலம் அடைந்து விட்டது.ஆட்ட நாயகர் விருது கிடைத்தது.முதல் சதத்தை மூன்று சதமாக மாற்றினார்.
இந்த மாதிரி செய்தவர்கள் மூவர் மட்டுமே.இவருக்கு முன்னால் செய்த இரண்டு வீரர்கள்.
மேற்கு தீவுகள் அணி யின் காரி சோபர்ஸ் 1958 ல் சபீனா பார்க் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்தார். சோபரஸ் 365*

1964. ஆஸ் தி ரே லி ய அணியின் கேப்டன் மற்றும் ஒபனிங் வீரர் பாப் சிம்ப்சன் தனது முதல் டெஸ்ட் சதத்தை மூன்று சதம் ஆக்கிய இரண்டாவது ஆட்டக் காரர். இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டர் டெஸ்டில் 311 ரன்கள் எடுத்தார்.
இந்த சென்னை டெஸ்டில், இந்திய வீரர் கருண் நாயர் தனது முதல் சதத்தை மூன்று சதமாக ( triple century ) மாற்றி சாதனை புரிந்தார்.
இவர் அடித்தது 4 சிக்ஸர் கள் , 32 பவுண்டரிகள், எதிர் கொண்ட பந்துக்கள் 38.
எடுத்த ரன்கள் 303 * நாட் அவுட்.இவரை தவிர இந்த டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்தவர்கள் மொயின் அலி ( இங்கிலாந்து ) 146 ரன்கள்.
ஆடிய பந்துக்கள் 262
( 13 x 4. & 1 x 6 )
கே எல் ராகுல், இரட்டை சதத்தை மிஸ் செய்தார் 1 ரன்னில்.
311 பந்துக்கள் எதிர் கொண்டார். ( 16 x 4. & 3 x 6 )
எடுத்த ரன்கள் 199
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஸ்கோர் 284 / 4 மொயின் அலி 120 * பென் ஸ்டோக்ஸ் 5 *
அதிக ரன்கள் எடுத்தவர்கள் ஜோ ரூட் 88 , ஜான்னி பேர்ஸ்டாேவ் 49
இரண்டாம் நாள் இங்கிலா ந்து அணி ஆல் அவுட். ஸ்கோர் 477 ரன்கள்.
மொயின் அலியின் 146 ரன்கள் தவிர, அதிக ரன்கள் குவித்த இருவர்.
லியம் டாவ்சன் 66 *
அடில் ரஷீத் 60
146 ரன் எடுத்த மொயின் அலி விக்கெட்டை எடுத்தவர் உமேஷ் யாதவ். கேட்ச் பிடித்தது ஜடேஜா.
இந்திய அணி பவுலிங்
உமேஷ் யாதவ் 2 - 73
இஷாண்ட் ஷர்மா 2 - 42
ஆர் அஸ்வின் 1 - 151
ஜடேஜா 3 - 106
அமித் மிஷ்ரா 1 -87
இரண்டாம் நாள் முடி வில்60 ரன்கள் எடுத்து இருந்த இந்தியஅணி மூன்றாம் நாள் முடிவில் ஸ்கோர் 391 - 4
கருண் நாயர் 71 * , முரளி விஜய் 17 *
அவுட் ஆனவர்கள்
பார்த்திவ் பட்டேல் 71 ( 7 x 4 ) 152 - 1
புஜாரா 16 ( 3 x 4 ) 181 - 2
விராட் கோஹ்லி 15 ( 1 x 4 ) 211 - 3
கே எல் ராகுல் 199 ( 16 x 4 & 3 x 6 ) 372
199 ரன்கள் அடித்த கே எல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தியவர் ரஷீத். கேட்ச் பிடித்தது பட்லர்.
நான்காம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு டிக்ளர் செய்தனர், 759 ரன்களுடன்.
முரளி விஜய் 29 ( 4 x 4 ) 435 - 5
ஆர் அஸ்வின் 67 ( 6 x 4. & 1 x 6 ) 616 - 6
ஜடேஜா 51 ( 1 x 4. & 2 x 6 )
754 - 7
இங்கிலாந்து அணி பவுலிங்
ப்ராட் 2 - 80
ஜகே பால் 0 - 93
மொயின் அலி 1 - 190
பென் ஸ்டோக்ஸ் 1 - 76
ரஷீத் 1 - 153
டாவ்சன் 2 - 129
12 ரன்களுடன், 5 ஆம் நாள் ஆட்டத்தை , தங்கள் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தனர்,
இங்கிலந்து அணி ஆட்டக்காரர்கள்.உபரி ரன்கள் 21 தவிர இரட்டை பட எண் ரன்கள் எடுத்தது நான்கு வீரர்கள் மட்டும். கேப்டன் குக் 49 ( 134 பந்துக்கள். 4 x 4 )
கே ஜென்னிங்ஸ் 54
( 121 பந்துக்கள். 7 x 4 )
மொயின் அலி 44 ( 97 பந்துக்கள். 4 x 4 )
பென் ஸ்டோக்ஸ் 23 ( 54 பந்துக்கள். 4 x 4 )
மற்றவர்கள் எடுத்தது ஒற்றை பட ரன்.
இந்திய அணி பவுலிங்.
உமேஷ் யாதவ் 1 - 36
இஷாண்ட் ஷர்மா 1 - 17
ஆர் அஸ்வின் 0 - 56
ஜடேஜா 7 - 48
அமித் மிஷ்ரா 1 - 30
இங்கிலாந்து அணி
ஆல் அவுட் 207.
303 * குவித்து ஆட்ட நாயகர் விருது பெற்ற, கருண் நாயர் அதிகமான டெஸ்டுக்கள் விளையாட வில்ல.இந்த டெஸ்டில் நின்று பொறுமையாக ஆடி இந்திய அணி வெற்றி பெற பெரிதும் உதவியர்.ஆனால், அவருக்கு போதிய வாய்ப்புக்கள் கொடுக்க படவில்லை.
இந்திய அணிகளில் தொடர்ந்து சரிவர ஆடாத வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புக்கள் கொடுக்கப் பட்டுள்ளன.கருண் நாயர் ஆடியது மொத்தம் 6 டெஸ்டுக்கள்.
முதல் டெஸ்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக
மொஹாலி. நவம்பர், 2016
கடைசியாக ஆடிய டெஸ்ட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தரம்சாலா. மார்ச் 2017.
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைப் பெற்ற 2016 ஆம் வருட டெஸ்டில் கருண் நாயர் புதிய சரித்திரம் படைத்து அசத்தினார். இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 75 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றனர்.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications