டெல்லி : இந்த இங்கிலாந்து , இந்தியா டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்து அணியில் அறிமுக ஆட்டக்காரர்கள் 5, இந்திய அணியில் 2.இந்த டெஸ்ட் மேட்ச் டெல்லியில் 1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைப் பெற்றது.டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் நைஜீல் ஹோவார்ட் ( Nigel Howard ) முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தார்.
ஜாக் ராபர்ட்சன் ( Jack Robertson ) , பிராங் லோவ் சன் (Frank Lowson) இருவரும் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை துவக்கினர்.இந்திய அணிக்காக பவுலிங்கை டாட்டு பாட்கர், (Dattu Phadkar ) நிரோடே சௌதுரி ( Nirode Chowdhury ) ஜோடி துவக்கினர்.9 ரன்கள் இருக்கும் போது இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் விழுந்தது.

பிராங் லோவ்சன் அவுட் ஆனார். விக்கெட் எடுத்தவர் டாட்டு பாட்கர்.
அடுத்து களம் இறங்கிய டான் கென்யோன் ( Don Kenyon ) ஒப்பனர் ராபர்ட்சன் ஜோடி சேர்ந்து ஆடி ஸ்கோரை நகர்த்தினர்.இங்கிலாந்து அணியின் ஸ்கோரன் 79 ல் இரண்டாவது விக்கெட் விழுந்தது.
79 - 2கென்யோன் அவுட்.ஷிண்டே வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.
அவர் எடுத்தது 35 ரன்கள். ஒப்பனிங் பேட்ஸ்மன் ராபர்ட்சன் 50 ரன்களுக்கு அவுட் ஆனார்.lbw ஷிண்டே வீசிய பந்தில்.
102 - 3 ஸ்பின் பவுலர்கள், வினு மன்காட் ( இடது கை ஸ்பின்) சது ஷிண்டே (லெக் பிரேக் கூக்ளி) இருவரும் சிறப்பாக பந்துகள் மாற்றி, மாற்றி வீச ஆரம்பித்தனர்.
இங்கிலாந்து வீரர்களால் வெகு வேகமாக ரன்கள் குவிக்க முடியவில்லை.
விரைவில் டோனால்ட் கார் ( Donald Carr ) விக்கெட் கீப்பர் ஜோஷி பிடித்த கேட்சில் மன்காட் வீசிய பந்தில் அவுட் ஆனார். 14 ரன்கள்.
111 - 4 கிட்டதட்ட 40 ரன்களுக்கு பிறகு அடுத்த ஆட்டக்காரர் டிக் ஸ்பூனர் (Dick Spooner ) பெவிலியன் திரும்பினார். ஷிண்டே வீசிய பந்தில் இவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார்.11 ரன்கள்.
153 - 5 ஆலன் வாட்கின்ஸ் ( Allan Watkis ) அவுட் ஆனது அவரது 40 வது ரன்களில்.
இவரும் மன்காட் பந்தில், ஜோஷி பிடித்த கேட்சில் தன் விக்கெட்டை இழந்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலந்து அணி ஆல் அவுட் ஆயிற்று.
மற்ற ஆட்டக்காரர்கள் விவரம்
கேப்டன் ஹோவார்ட் 13
ஷாக்லேட்டன் 10
ஸ்டாதம் 4
டாட்டேர்சல் 4
ரிட்க்வாய் 15
உபரி 3 ( Extras )
இங்கிலாந்து அணியின் மொத்த ஸ்கோர் 203.
முதல் நாள் ஆட்டம் , இரு ஸ்பின் பவுலர்கள் திறமை ஆதிக்கம் மேல் ஒங்கி இருந்தது.
வினு மன்காட்
35 ஓவர்கள் 53 ரன்கள்
3 விக்கெட்டுகள் 15
மெய்டன்கள்
சது ஷிண்டே
35.3 ஓவர்கள் 91 ரன்கள்
6 விக்கெட்டுகள் 9
மெய்டன்கள்
இந்திய அணியின் ஒப்பனிங் ஜோடி விஜய் மர்ச்சண்ட் , பங்கஜ் ராய் ஆடத் தொடங்கினர்.
முதல் விக்கெட் விழுந்தது.
பங்கஜ் ராய் 12 ரன்கள்.
பந்து வீசியவர் ஷாக்லேட்டன்
18 - 1
மைதானத்திற்குள் ஆட வந்தவர் உயரமான பாலி உம்ரீக்கர்.
இவர் 21 ரன்கள் எடுத்த பொழுது அவுட் ஆனார், ரன் அவுட் முறையில்.
64 - 2
அடுத்து கேப்டன் விஜய் ஹாசரே, விஜய் மர்ச்சண்ட்வுடன் இணைந்தார்.
இருவரும் பிரமாதமாக ஆட ஆரம்பித்ததனர்.இங்கிலாந்து பவுலர்கள் எவ்வளவு முயற்சி செய்தும், இருவரது பேட்டுகளிலிருந்து ரன்கள் அதிகரிப்பத்தை தவிர்க்க முடியவில்லை.
விஜய் மர்ச்சண்ட் அவரது சதத்தை பூர்த்தி செய்தார்.
இரண்டாம் நாள் முடிவில் , இந்திய அணியின் ஸ்கோர் இரண்டு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 186 ரன்கள்.மூன்றாம் நாளில் விஜய்
மர்ச்சண்ட் ஸ்டாதம் பந்தில் க்ளீன் போல்ட் ஆனார்.
அவரது ஸ்கோர் 154.
275 - 3
இந்த ஜோடி 211 ரன்கள் பார்ட்னெர்ஷிப்பில்
சேர்த்தனர்.அடுத்து வந்த டாட்டு பாட்கர் 3 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
278 - 4
வினு மன்காடும் அதிக ரன்கள் குவிக்கவில்லை.
அவர் எடுத்தது ரனகள் 4
292- 5
விஜய் மர்ச்சண்ட்டை தொடர்ந்து சதம் அடித்த கேப்டன் விஜய் ஹாசரே தொடர்ந்து ஆடிக் கொண்டு இருந்தார்.
ருசி மோடி 7 ரன்களுக்கு வெளியேறினார்.
328 - 6
ஹேமு அதிகாரியும், கேப்டன் ஹாசரேயும் சேர்ந்து ஸ்கோரை நகர்த்தி சென்றனர்.
இருவரின் பார்ட்னர்ஷிப் 90 ரன்கள் ஆன பொழுது, அந்த மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி கேப்டன் விஜய் ஹாசரே இந்திய அணியின் முதல் இனிங்சை டிக்ளர் செய்தார்.
அப்பொழுது ஸ்கோர் விஜய் ஹாசரே 164* நாட் அவுட் , அதிகாரி 38* நாட் அவுட்.
இந்திய அணியின் ஸ்கோர் 418 - 6 டிக்.
இங்கிலாந்து பவுலிங்
ப்ரைன் ஸ்டாதம் 1 - 49
ஷாக்லேட்டன் 1 - 76
டாட்டேர்சல் 2 - 95
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கியில் முன்னேற்றம் தெரிந்தது. முதல் விக்கெட் 61 ரன் கள். ராபர்ட்சன் அவுட்
22 ரன்
61 - 1
இரண்டாவது விக்கெட்
78 - 2
கென்யோன் அவுட் 6
ராய் பிடித்த கேட்ச் ஷிண்டே வீசிய பந்தில்.
116 - 3
லோவ்சன் 68 , மன்காட் வீசிய பந்தில் பாட்கர் பிடித்த கேட்சின் மூலம்.
வாட்கின்ஸ் நின்று நிதானமாகவும், பொறுமையுடனும் ஆடிக் கொண்டு இருந்தார்.
அவருக்கு அருமையாக கம்பெனி கொடுத்த டோனால்ட் கார், அவர் பங்கிற்கு ரன்கள் எடுத்தார்.இருவரும் நாள் முடிவில் 51* நாட் அவுட், 44 * நாட் அவுட்.
இங்கிலாந்து 202 - 3
கடைசி நாள் முழுவதும் இங்கிலாந்து அணி
பேட்டிங் ஆடியது.முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 368 ரன்கள்.
வாட்கின்ஸ் 137 * நாட் அவுட்
டோனால்ட் கார் 76
உபரி ரன்கள் 28 ( Extras )
இந்தியா பவுலிங்
வினு மன்காட் 4 - 58
சது ஷிண்டே 2 - 162
மேட்ச் டிராவில் முடிவடைந்தது.
இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் லோவ்சன் , வாட்கின்ஸ், டோனால்ட் கார் போன்றவர்கள் சிறப்பாக ஆடி இந்தியா வெற்றி பெறுவதற்கு தடையாக இருந்தனர்.
இந்த டெஸ்டில் இந்திய அணியில் அறிமுகம் ஆன இரண்டு வீரர்கள்
பங்கஜ் ராய்
நானா ஜோஷி
(விக்கெட் கீப்பர் )
ஜோஷி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் இரண்டு கேட்சுகள் பிடித்தும், இரண்டு ஸ்டம்ப்பிங்களும் செய்தார்.
இங்கிலாந்து அணியில் அறிமுகம் ஆன 5
வீரர்கள்.
பிரெட் ரிட்க்வே (Fred Ridgway )
நைஜீல் ஹோவார்ட் ( Nigel Howard )
டிக் ஸ்பூனர் ( Dick Spooner )
டோனல்ட் கார் ( Donald Carr )
டான் கென்யோன் ( Don Kenyon)
வாசுதேவன், பெங்களூரு