For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா சரித்திரம் படைத்த டெஸ்ட்.. அதுவும் சென்னையில்.. வரலாற்றில் முதல் வெற்றியை பெற்றது எப்படி?

IND VS ENG : இது சரித்திரம் படைத்த டெஸ்ட் மேட்ச்.இதில் இரண்டு சதங்கள் எடுக்கப்பட்டன.இரண்டுமே இந்திய வீரர்களால் எடுக்கப் பட்டது.இந்திய ஸ்பின் பவுலர் ( ஆல்ரவுண்டர் ) 12 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.மேட்ச் முதல் நாள் முடிந்தது.இரண்டாம் நாள் ஓய்வு.இரண்டாம் நாள் ஆட்டம் மூன்றவது தினம் துவங்கி கடைசி நாள் வரையில் மேட்ச் சென்றது.

இந்திய டீம் வென்றது.டெஸ்ட் மேட்ச்சுக்கள் விளையாட துவங்கியத்தில் இருந்து இந்திய டீம் வென்ற முதல் டெஸ்ட் இந்த மேட்ச்சே ஆகும்.
இந்த டெஸ்ட் மேட்ச் அன்றைய மெட்ராசில்
பிப்ரவரி 6 - 10, 1952 நடைப் பெற்றது.

India vs england test history- Look back at India first ever test win at chennai

டாஸ் வென்ற இங்கிலாந்து டீம் முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. பிராங்க் லோவ்சன் ( Frank Lowson ), டிக் ஸ்பூனர் ( Dick Spooner )இருவரும் இங்கிலாந்து டீம் சார்பாக ஓபன் செய்தனர் பேட்டிங்கை.டாட்டு பாட்கர், ரமேஷ் திவெச்சா ஒபனிங் பவுலிங் செய்தனர்.வெகு விரைவில் இங்கிலாந்து டீம் முதல் விக்கெட்டை இழந்தது.

லோவ்சன் அவுட். பவுலர்
டாட்டு பாட்கர்.
1 ரன் .

3 - 1

டாம் கிரேவனே ( Tom Graveney ) ஸ்பூனர் உடன் சேர்ந்து, இருவரும்
நன்றாகவே விளையாட துவங்கினார்கள்.

இந்திய பவுலர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

ஸ்பின் பவுலர்கள் குலாம் அஹ்மத் ( ஆப் பிரேக் ) வினு மன்காட் ( இடது கை ஸ்பின் பவுலர் ), லாலா அமர்நாத் இவர்கள் பந்து வீசியும், இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. ஸ்கோர் 71 இருக்கும் பொழுது டாம் கிரேவனே , ஸ்டம்பிங் செய்யப் பட்டார், விக்கெட் கீப்பர் சென் அவர்களால். விக்கெட் எடுத்தவர் மன்காட்.

கிரேவனே அவுட். ரன்கள் 39.

71 - 2

ஸ்பூனர் உடன் சேர்ந்தார் ஜாக் ராபர்ட்சன். இருவரும் சிறப்பாக விளையாட, இங்கிலாந்து டீம் 100 ரன்களை கடந்தது.மாறுதலுக்காக, கேப்டன் விஜய் ஹாசரே பந்து வீசினார்.இவர் ஸ்பூனர் விக்கெட்டை கை பற்றினார், இங்கிலாந்து டீம் ஸ்கோர் 131 இருக்கும் பொழுது. கேட்ச் பிடித்தவர் பட்கார்.ஸ்பூனர் எடுத்தது 66 ரன்கள்.

131 - 3

அடுத்த எல்லா விக்கெட்டுக்களையும் தொடர்ந்து, தனது அபார பந்து வீச்சினால் வீழ்த்தி சாதித்தவர் ஸ்பின் பவுலர் வினு மன்காட்.ஆலன் வாட்கின்ஸ் (9)
கேட்ச் C D கோபிநாத்

174 - 4

சைரில் பூலே ( Cyril Pools )
(15)

197 - 5

வெகு சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஜாக் ராபர்ட்சன் விக்கெட்டை இழந்தார் மன்காட் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து.இவர் எடுத்தது 77 ரன்கள்.

244 - 6

மால்கம் ஹில்டன் ( 0 )
சென் ஸ்டம்பிங் செய்தார்.

252 - 7

பிரைன் ஸ்டாதம் ( 6 )
ஸ்டம்பிங் செய்தவர் சென்.

261 - 8

பிரெட் ரிட்க்வே ( Fred Ridgway). ( 0 )

Lbw முறையில் அவுட்.

261 - 9

பொறுமையுடனும், பொறுப்போடும் ஆடிக் கொண்டு இருந்த கேப்டன் டோனால்ட் கார் ( Donald Carr ) சென் செய்த ஸ்டம்பிங் மூலம் அவுட் ஆனார்.
அவர் எடுத்தது 40 ரன்கள்.

இவரதுதான் கடைசியாக விழுந்த விக்கெட்.

266 ஆல் அவுட்.

உபரி ரன்கள் 11

இந்திய டீம் பவுலிங்.

டாட்டு பாட்கர் 1 - 49
விஜய் ஹாசரே 1 - 15
வினு மன்காட் 8 - 55

வினு மன்காட் வீசிய பந்துகளை எதிர் கொள்ள இங்கிலாந்து டீம் வீரர்கள் மிகவும் சிரமம் பட்டனர். அவர் பவுலிங்கில் ரன்கள் எடுக்க திணறினார்கள்.ஒன்றன் பின் ஒன்றாக அவுட் ஆகி பெவிலியனுக்குதிரும்பிய வண்ணம் இருந்தனர்.மன்காட் வீசிய 38.5 ஓவர்களில் 15 ஓவர்கள் மெய்டன்கள்.இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய டீம் ஸ்கோர் 206 - 4

இந்திய டீமின் பேட்டிங்கை முஷ்டாக் அலியும், பங்கஜ் ராயும்
துவக்கினர்.இருவரும் நன்றாக ஆட, டீமின் ஸ்கோர் 50 ரன் களை கடந்தது.
ஸ்கோர் 53 இருந்த பொழுது ஸ்பூனர் ஸ்டம்பிங் செய்ய கார் வீசிய பந்தில் முஷ்டாக் அலி அவுட். (22)

53 - 1

பங்கஜ் ராய் நேர்த்தியாக ஆடிக் கொண்டு இருந்தார். உடன் சேர்ந்த கேப்டன் ஹாசரே அவுட் ஆனார் 20 ரன்கள் எடுத்ததும் 97 - 2 ராயும், மன்காடும் தொடர்ந்தனர்.22 ரன்களுக்கு மன்காட் அவுட். கார் பந்து வீச கேட்ச் பிடித்தது வாட்கின்ஸ்

157 - 3

அடுத்து வந்த லாலா அமர்நாத், ராய் ஜோடி ரன்களை குவித்தனர்.
200 ரன்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது சதம் எடுத்து இருந்த பங்கஜ் ராய் அவுட்.வாட்கின்ஸ் கேட்ச் பிடித்தார், டாட்டெர்சல் ( Tattersall ) பவுலிங்கில்.
பங்கஜ் ராய் எடுத்தது 111 ரன்கள்.

191 - 4

அந்த நாள் ஆட்ட இறுதியில் லாலா அமர்நாத்தும்,
(27 * ) டாட்டு பாட்கரும் (3* ) விளையாடிக் கொண்டு இருந்தனர்.இங்கிலாந்து டீம் பவுலர்கள் எடுத்தது 4 விக்கெட்டுக்கள் மட்டுமே. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், ஸ்கோர் இரண்டாவது இன்னிங் சில் இங்கிலாந்து டீம் 12 ரன்கள், விக்கெட் இழப்பின்றி.
31 ரன்கள் குவித்த லாலா அமர்நாத் அவுட். ஸ்டாதம் பந்தில் கேட்ச் பிடித்தது ஸ்பூனர்.

216 - 5

பாட்கர் தொடர்ந்து நன்றாக விளையாடிக் கொண்டு இருந்தார்.அவருடன் விளையாட வந்தவர், பாலி உம்ரிகர்.இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளி படுத்தினர்.
இங்கிலாந்து டீமின் பவுலிங்கை துவம்சம் செய்தனர் . இந்திய டீமின் ஸ்கோர் வேகமாக முன்னேறியது. ஸ்கோர் 300 ஐ கடந்தது.பாட்கர் (61 ) அவுட் . பவுலர் ஹில்டன்.

320 - 6

CD கோபிநாத், உம்ரிகர் ஜோடி ஆட்டத்தை தொடர்ந்தனர். உம்ரிகர் சதம் எடுத்தார். கோபிநாத் சிறப்பாக ஆடினார். 400 ரன்களை கடந்தது இந்திய டீம். டாட்டெர்சலின்
பவுலிங்கில் கோபிநாத் அவுட் ( 35 ).

413 - 7

தொடர்ந்து விக்கெட்டுக்கள் விழ,

430 - 8

448 - 9

இந்திய டீம் கேப்டன் விஜய் ஹாசரே டிக்ளர் செய்தார்,

457 - 9 dic

உம்ரிகர் (130 *)
குலாம் அஹ்மத் (1*)

இந்திய டீமின் பங்கஜ் ராய், பாலி உம்ரிகர் இருவரும் சதங்கள் அடித்து அசத்தினார்கள்.இவர்களுடைய அருமையான ரன் குவிப்பு, குறிப்பாக இந்திய டீம் 189 ரன்கள் முன்னிலையில் நிற்க பெரிதும் உதவியது.கேப்டனுக்கும், டீம் ஆட்டக்காரர்களுக்கும் நம்பிக்கையை அதிகரிக்க செய்தது.

இங்கிலாந்து டீம் பவுலிங்
அவர்கள் 7 பவுலர்களை
உபயோகித்தனர்.

ஸ்டாதம் 1 - 54
ரிட்க்வே 1 - 47
டாட்டெர்சல் . 2 - 94
ஹில்டன் 2 - 100
கார் 2 - 84
வாட்கின்ஸ் 1 - 50

நான்காம் நாள் துவக்கத்திலேயே இங்கிலாந்து டீம், முதல் விக்கெட்டை இழந்தது.
ஸ்பூனர் ( 6 )
அவுட்.

12 - 1

7 ரன்களில் லோவ்சன் அவுட். கேட்ச் மன்காட் பவுலர் பாட்கர்.

15 - 2

கிரேவனே , ராபர்ட்சன் ஜோடி சிறப்பாக ஆடினார்கள். தொடர்ந்து வந்த வாட்கின்ஸ் நிலைமை அறிந்து ஆடினார்.இந்த மூவரும் தான் தாக்குப் பிடித்து ஆடினார்கள்.
டாம் கிரேவனே (25 ) குலாம் அஹ்மதுக்கு தன் விக்கெட்டை கொடுத்தார்.

68 - 3

ஜாக் ராபர்ட்சன் அவுட். LBW குலாம் அஹ்மத் 56 ரன்கள்.

117 - 4

பூலே ( 3 ) அவுட் கேட்ச் கொடுத்து. பவுலர்
குலாம் அஹ்மத்

135 - 5

5 ரன்களுக்கு கேப்டன் டோனால்ட் கார் ( Donald Carr ) மன்காட் கேட்ச் பிடிக்க, பந்து வீசியவர் குலாம் அஹ்மத்.

159 - 6

அடுத்து விக்கெட்டை கொடுத்தவர் வாட்கின்ஸ்
( 48 ) நன்றாக ஆடி வந்த இவர் மன்காட் போட்ட பந்தை ஆட அது கேட்சாக விழ பிடித்தது பவுலிங் செய்த மன்காடே.

159 - 7

பிரைன் ஸ்டாதம் (9 ) கோபிநாத் பிடித்தார் கேட்சை. பவுலர் மன்காட்.

178 - 8

அடுத்து விழுந்த விக்கெட்
ரிட்க்வே (0 ) போல்ட் மன்காட்.

178 - 9

கடைசியாக விழுந்தது ஹில்டன் விக்கெட்
( 15 )
சென் ஸ்டம்பிங் செய்ய விக்கெட் வீழ்த்தியவர் மன்காட்.
183 ஆல் அவுட்.

உபரி 9 ரன்கள்.

இந்திய டீம் பவுலிங்

பாட்கர் . 1 - 17
திவெச்சா 1 - 21
குலாம் அஹ்மத் 4 - 77
வினு மன்காட் 4 - 53

இந்திய டீம் மகத்தான வெற்றி பெற்றது , ஒரு இன்னிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில்.

பேட்டிங்கில் சதம் எடுத்தவர்கள் பங்கஜ் ராய் ( 111 ) உம்ரிகர் (130 ) தவிர
பாட்கர் (61), கோபிநாத்
( 35) போன்றவர்களும் திறமையாக ஆடினார்கள்.

பவுலிங்கில் வினு மன்காட் (12 ) குலாம் அஹ்மத் ( 4 ) விக்கெட்டுக்கள் எடுத்து டீமின் வெற்றிக்கு உதவினர்.இங்கிலாந்து டீமின்
பேட்டிங்கில் ஸ்பூனர் (66 ), ராபர்ட்சன்.(77 ), (56) டோனால்ட் கார் ( 40 ) வாட்கின்ஸ் ( 48 )
ரன்கள் எடுத்து உதவினர்.

பவுலிங்கில் டாட்டெர்சல், ஹில்டன், கார் ஆகியோர் தலா இரண்டு விக்கெடுக்கள் எடுத்தனர்.இரண்டு டீம்களின் விக்கெட் கீப்பர்களும் சிறப்பாக செயல் பட்டனர்.
ஸ்பூனர் 2 கேட்சுகள் 1 ஸ்டம்பிங்.சென் 5 ஸ்டம்பிங். இந்த டெஸ்ட் மேட்ச் 4 நாட்கள் மட்டும் தான் நடைப் பெற்றது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, January 31, 2024, 22:04 [IST]
Other articles published on Jan 31, 2024
English summary
India vs england test history- Look back at India first ever test win at chennai இந்தியா சரித்திரம் படைத்த டெஸ்ட்.. அதுவும் சென்னையில்.. வரலாற்றில் முதல் வெற்றியை பெற்றது எப்படி?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+