For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், கங்குலி ஜோடி சேர்ந்து 249 ரன்கள்..சிக்சர்களை பறக்கவிட்ட கங்குலி..இந்தியா அபாரமாக வென்ற கதை

லீட்ஸ்: இந்த டெஸ்டில் மொத்தம் நான்கு சதங்கள். இரண்டு டீம்களின் கேப்டன்களும், சதம் எடுத்தனர். மொத்தம் மூன்று இன்னிங்ஸ்களே பேட்டிங் விளையாடப்பட்டன. 7 LBW முறையில் அவுட் ஆகினர். ஒரு இன்னிங்சில் உபரி ரன்கள் 50 ( 18 நோ பால்கள் உள்பட ) மொத்தம் 7 சிக்ஸர்கள். ஒரு ஸ்பின் பவுலர் மொத்தம் வீழ்த்திய விக்கெட்டுகள் 7.

India vs England test history - sachin and Ganguly historical partnership in leeds test

ஒரு டீமின் 4 பவுலர்கள் தலா 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர், தங்கள் பவுலிங்கில்.இந்திய டீமின் கேப்டன் சௌரவ் கங்குலி, டாஸ் வெற்றி அடைந்து, முதலில் பேட்டிங் ஆட தேர்வு செய்தார். இந்திய டீம் இரண்டு நாட்கள் முழுவதும் பேட்டிங் ஆடி, மூன்றாம் நாளன்று எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு, டிக்ளர் செய்தனர். ரன்கள் 628.

முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் 236/2. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் 584/4

இந்திய டீமின்

பவுண்டரிகள் 72
சிக்ஸர்கள் 6

ரன்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன.

சச்சின் டெண்டுல்கர் 193 ( 19 x 4 & 3 x 6 ) ( 330 பந்துகள் )
ராகுல் திராவிட் 148
( 23 x 4 ) (307 பந்துகள்)

சௌரவ் கங்குலி 128
( 14 x 4 & 3 x 6 )
( 167 பந்துகள்)

சஞ்சய் பங்கர் 68 (10 x 4) (236 பந்துகள்)
இங்கிலாந்து டீம் பவுலிங்

ஆண்டி கட்டிக் 3 - 150
அலெஸ் துடோர் 2 - 146
அஷ்லே கிளேஸ் 1 - 135
மாத் யூ ஹோகர்ட் 1 - 102
அன்ட்ரு
பிளின்ட் அப் 1 - 68

சஞ்சய் பங்கர், ராகுல் திராவிட் ஜோடி 170 ரன்கள் குவித்தனர்.ராகுல் திராவிட் ,சச்சின் டெண்டுல்கர் ஜோடி 150 ரன்கள் குவித்தனர். சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி ஜோடி 249 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து டீமின் முதல் இன்னிங்சில் அலெக் ஸ்டெவார்ட் அதிக பட்சமாக 78 ரன்கள் எடுத்தார்
( 11 x 4) ( 120 பந்துகள் )

மைக்கேல் வஹான் 61 ( 9 x 4) (116 பந்துகள்) இங்கிலாந்து டீம் மூன்றாம் நாள் ஆட்ட முடிவிற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து, 264 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்திய டீமின் பவுலர்கள் சிறப்பாக பந்துகளை வீசினார்கள்.
ஓபனிங் ஜோடி 21 ஓவர்கள் தாக்கு பிடித்து விளையாடினர்.

முதல் விக்கெட்டு 67 ரன்களுக்கு விழுந்தது. 185 ரன்களை எட்டுவதற்குள் இங்கிலாந்து டீம் 7 விக்கெட்டுகளை இழந்து விட்டனர். பின்னர் அலெக் ஸ்டெவார்டும், அஷ்லே கிளேஸ் சேர்ந்து 70 ரன்கள் குவித்தனர். அஷ்லே கிளேஸ் 25 ரன்களுக்கு அவுட் (4 x 4) (52 பந்துகள்)
273 ரன்களுக்கு இங்கிலாந்து டீம் ஆல் அவுட்

இந்திய டீமின் பவுலிங்
சாஹீர் கான் 2 - 59
அஜித் அகார்கர் 2 - 59
அணில் கும்ப்ளே 3 - 93
ஹர்பஜன் சிங் 3 - 40

பாலோவ் ஆன் (Follow-on) பெற்ற இங்கிலாந்து டீம் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. அவ்வப்பொழுது விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.
148 ரன்கள் இருந்த பொழுது, 4 விக்கெடுகள் விழுந்து விட்டன. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து டீம் ஸ்கோர் 239 - 4 இங்கிலாந்து டீம் கேப்டன் நாஸ்ஸர் ஹுசைன் 90 *, அலெக் ஸ்டெவார்ட் 40 *.

இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டு இருந்தனர். ஐந்தாம் நாள், நாஸ்ஸர் ஹுசைன் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் அவுட் ஆனார். 110 ரன்கள். (18 x 4 & 6 x 1) ( 194 பந்துகள்)

265 - 5
அடுத்த இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன.
அலெக் ஸ்டெவார்ட் அவுட். 47 (:7 x 4 ) ( 134 பந்துகள்)

267 - 7
அடுத்து 42 கூடுதலான ரன்களுக்கு, இங்கிலாந்து டீம் ஆல் அவுட் ஆகிவிட்டது.
அவர்கள் இரண்டாவது இன்னிங்சில் எடுத்த மொத்த ரன்கள் 309.
திராவிட் மூன்று கேட்ச்சுகள் பிடித்தார்.

இந்திய டீமின் பவுலிங்

இந்திய டீமின் பவுலிங்
சாஹீர் கான் 1 - 63
அஜித் அகார்கர் 1 - 59
அணில் கும்ப்ளே 4 - 66
ஹர்பஜன் சிங் 1 - 56
சஞ்சய் பங்கர் 2 - 54

முதல் இன்னிங்சில், 10 நோ பால்களில், 5 நோ பால்களை வீசியவர் அணில் கும்ப்ளே.
ஆட்ட நாயகர் ராகுல் டிராவிட். அணில் கும்ப்ளே 7 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த டெஸ்ட் இங்கிலாந்தின் லீட்ஸ் ( Leeds ) மைதானத்தில் நடைபெற்றது.

22 - 26, August 2002

இந்திய டீம் ஒரு இன்னிங்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை அடைந்தது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, February 11, 2024, 13:34 [IST]
Other articles published on Feb 11, 2024
English summary
India vs England test history - sachin and Ganguly historical partnership in leeds test சச்சின், கங்குலி ஜோடி சேர்ந்து 249 ரன்கள்..சிக்சர்களை பறக்கவிட்ட கங்குலி..இந்தியா அபாரமாக வென்ற கதை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+