Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிகப் பெரிய ரிஸ்க்.. 12 ஆண்டுகளில் இந்திய அணியில் இப்படி நடந்ததே இல்லை.. ரோஹித்-துக்கு வந்த சிக்கல்

மும்பை : இந்திய டெஸ்ட் அணி கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத, அணிக்கு பாதகமாக அமையக் கூடிய ஒரு புதிய விஷயத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அணியின் மூன்று சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக விளங்கிய விராட் கோலி, புஜாரா, அஜின்க்யா ரஹானே ஆகியோர் இல்லாமல் இந்திய அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா ஆடிய டெஸ்ட் போட்டிகளில் மூத்த வீரர்களான விராட் கோலி, அஜின்க்யா ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரில் ஒருவராவது டெஸ்ட் அணியில் இடம் பெற்று வந்துள்ளனர். விராட் கோலி மிகச் சில போட்டிகளில் விலகி இருக்கிறார். அப்போது ரஹானே அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

India vs England Test : India to play in a test match without Virat Kohli, Pujara, Rahane in 12 years

அதே போல அணியில் சில காலம் புஜாரா மற்றும் ரஹானே நீக்கப்பட்ட போது விராட் கோலி அணியில் இடம் பெற்று வந்தார். எப்படிப் பார்த்தாலும் மூவரில் இருவராவது ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்று வந்தனர். கடந்த ஓராண்டாக ரஹானே, புஜாராவை இந்திய அணி நிர்வாகம் ஒதுக்கி வைக்கத் துவங்கியது.

அதன் விளைவாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருவருமே இந்திய அணியில் இடம் பெறவில்லை. அப்போது விரட்ட கோலி அணியில் பங்கேற்றார். அதனால், இந்திய அணி, தென்னாப்பிரிக்க தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் கடினமான சூழலில் ஓரளவு சமாளித்து வெற்றியும் பெற்றது.

அதை அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 25 முதல் துவங்க உள்ளது. இந்த நிலையில், விராட் கோலி தனிப்பட்ட காரணத்தால் டெஸ்ட் அணியில் இருந்து விலகி இருக்கிறார். 12 ஆண்டுகள் கழித்து மூன்று அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்திய ஆடுகளங்களில் நடக்கும் டெஸ்ட் தொடர் என்பது மட்டுமே இப்போதைக்கு இந்திய அணிக்கு சாதகமான சூழலாக இருக்கிறது.

Story first published: Tuesday, January 23, 2024, 21:49 [IST]
Other articles published on Jan 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+