IND VS ENG : கடைசி பந்து வீசும் வரையில் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச் இது. இந்திய டீமின் கேப்டனின் மகனும் இந்திய டீமிற்கு கேப்டனாக இருந்துள்ளார்.இங்கிலாந்து டீமின் கேப்டன் வயது 42
இந்திய டீமில் பங்கு பெற்றவர்களில் பெரும் பாலானோர் வயது 30 க்கும் அதிகமானது.
சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் நடைப் பெற்ற முதல் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மேட்ச் இது.இந்த தொடர் இரண்டாம் உலக போருக்கு பிறகு நடத்தது.

இதில் பங்கு பெற்ற சில வீரர்கள் இரண்டாம் உலக போருக்கு முன்னால் நடைப் பெற்ற டெஸ்ட் மேட்சுகளில் விளையாடியவர்கள்.பல பிரபல வீரர்கள் இரண்டு டீம்களிலும் இடம் பெற்று இருந்தனர்.டெஸ்ட் மேட்ச் மூன்று நாட்களுக்கு மட்டும்.
முதல் நாள் ஆட்டம் முடிந்தும் இரண்டாம் நாள் ஓய்வு தினம் ( Rest day )
இந்த டெஸ்ட் இங்கிலா ந்தின் மான்செஸ்டரில் நடைப் பெற்றது.
டெஸ்ட் 20 ஜூலை - 23 ஜூலை 1946 ல் நடைப் பெற்றது.டெஸ்ட் நடைப் பெற்ற தினங்களில் மழையும் இருந்தது.டாஸ் ஜெயித்த இந்திய டீமின் கேப்டன் இஃப்தக்கார் அலி கான் பட்டோடி ( Iftikhar Ali Khan Pataudi ) இந்திய டீம் பீல்ட் செய்ய தீர்மானித்தார்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து டீம் நான்கு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து இருந்தது.
லென் ஹட்டன் (Len Hutton ) 67
சிரில் வாஷ்ப்ரூக் ( Cyril Washbrook ) 52
டென்னிஸ் காம்டன் ( Dennis Compton ) 51
ஜோயி ஹார்ட்ஸ்டப் ( Joe Hardsraff ) 5
இந்த நான்கு வீரர்கள் அவுட் ஆனவர்கள்.
இந்திய டீமில் பவுலிங்கில் லாலா அமர்நாத்தும், வினு மன்காடும் மிக சிறப்பாக பந்து வீசி இரண்டு, இரண்டு விக்கெட்டுக்கள் கை பற்றினர்.அடுத்த நாள் ஓய்வு தினம் அன்றும் மழை.முதல் நாள் ஆட்டமும் தாமதமாக துவங்கியது மழையின் காரணமாக.
முதல் நாள் முடிவில் 45 * ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த கேப்டன் வால்லி ஹம்மோன்ட் (Wally Hammond) தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் 8 வது வீரராக அவுட் ஆனார். லாலா அமர்நாத் பந்தில் ( 69 )
பால் கிஃப் எடுத்தது 24 ரன்கள்.
மற்ற வீரர்கள்
அவ்வளவாக ரன்கள்
எடுக்கவில்லை.
பூஜ்ஜியம் (0) இருவரது ஸ்கோர்.
உபரி 6 ரன்கள்
இங்கிலாந்து டீம் ஆல் அவுட் 294 ரன்களுக்கு.
லாலா அமர்நாத் 5 - 96
வினு மன்காட் 5 - 101
இருவரும் இங்கிலாந்து டீம் ஆட்டக்காரர்களின் விக்கெடுக்களை பகிர்ந்துக் கொண்டனர்.அவர்கள் பேட்ஸ்மேன் அடித்தது மொத்தம் 9 பவுண்டரிகள்.
லென் ஹட்டன் ( 3 )
வால்லி ஹம்மோன்ட் ( 6 & 1 சிக்ஸர் )
இங்கிலாந்து டீம், இந்திய வீரர்களை விரைவில் அவுட் செய்து விடலாம் என்ற எதிர் பார்ப்பை முறியடித்தனர், இந்திய டீமின் ஓப்பனிங் வீரர்களான விஜய் மர்ச்சன்ட், முஷ்டாக்
அலி ஜோடி.
இங்கிலாந்து டீமின் பவுலர்கள் பில் வாய்ஸ் ( Bill Voice ) அலெக் பெட்ஸர் ( Alec Bedsar ) டிக் பொல்லார்ட் ( Dick Pollard ) மூவரும் வெகு சிறப்பாக பந்துக்கள் வீசியும், இந்திய டீமின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜோடியை பிரிக்க முடியாவில்லை.
இருவரும் இந்திய டீமின் ஸ்கோரை 100 ரன் களுக்கு மேல் உயர்த்தினர்.
ஸ்கோர் 124 ல் டிக் பொல்லார்ட் பந்தில் அவுட் ஆனவர் முஷ்டாக்
அலி ( 46 )
அடுத்து ஆட வந்த வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.
நான்காவதாக அவுட் ஆனவர் விஜய் மர்ச்சன்ட் ( 78 )
பொல்லார்ட் பந்தில் கேட்ச் பிடித்தது பெட்ஸர்.
9 பவுண்டரிகள்.
141 - 4
கடைசி நாள் ஆட்டத்தை துவக்கிய பொழுது இந்திய டீம் முதல் இன்னிங்சில் 7 விக்கெடுக்கள் இழந்த நிலையில் இருந்தனர்.மள மளவென்று விக்கெடுக்கள் விழ இந்திய டீம் ஆல் அவுட் 170.கேப்டன் இஃப்தக்கார் அலி கான் பட்டோடி எடுத்தது 11 ரன்கள்.இவர் விக்கெட்டையும் வீழ்த்தியவர் பொல்லார்ட்.
உபரி ரன்கள் 17.
மற்ற ரன்கள் ஒற்றைப் பட எண்.
இருவர் ஸ்கோர் செய்தது, (0) ரன்.
இங்கிலாந்து டீம் பவுலிங்
பில் வாய்ஸ் 1 - 44
அலெக் பெட்ஸர் 4 - 41
டிக் பொல்லார்ட் 5 - 24
இங்கிலாந்து டீம் இரண்டாவது இன்னிங்சை 5. விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளர் செய்தனர்.இரண்டாவது இன்னிங்ஸ் துவக்கத்திலேயே இங்கிலா ந்து டீமின் சிறந்த பேட் ஸ்மன் லென் ஹட்டன் அவுட். அமர்நாத் போட்ட பந்தில் கேட்ச் பிடித்தது விக்கெட் கீப்பர் ஹிந்த்லேகர் (Hindlekar ).
லென் ஹட்டன் 2 ரன்கள்
7 - 1
சிரில் வாஷ்ப்ரூக் மற்றும் டென்னிஸ் காம் டன் ஜோடி நன்றாக விளையாடினார்கள்.
ஸ்கோர் உயர தொடங்கியது. வாஷ்ப்ரூக் அவுட்.
26 ரன்கள். LBW மன்காட்
48 - 2
லாலா அமர்நாத், விஜய் ஹாசரே, வினு மன்காட் இந்த மூவர் மட்டும் இந்திய டீம் சார்பாக பவுலிங் செய்தனர்.தொடர்ந்து வந்த கேப்டன் ஹம்மோன்ட் 8 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேட்ச் பிடித்தது அப்துல் ஹபீஸ் ( Abdul Hafeez ) விக்கெட் எடுத்தது வினு மன்காட்.
68 - 3
அடுத்த வீரர் ஜோ ஹார்ட்ஸ்டப் அவுட் (0) பூஜ்ஜியம்
பந்து போட்டவர் அமர்நாத்
68 - 4
பால் கிஃப், நன்றாக விளையாடிக் கொண்டிருந்த டென்னிஸ் காம்டனுக்கு கம்பெனி கொடுத்தார்.ஸ்கோர் 84 க்கு உயர்ந்த பொழுது, பால் கிஃப் அவுட் ஆனார், மோதியிடம் கேட்ச் கொடுத்து. பவுலர் அமர்நாத். கிஃப் (0 ) பூஜ்ஜியம்.
84 - 5
அடுத்த வீரர் ஜாக் ஈகீன்( Jack Ikin)
நன்றாக ஆடி, இந்த இருவரும் 69 ரன்கள் வேகமாக குவித்தனர்.டென்னிஸ் காம்டன் (71*) & ஜாக் ஈகீன் (29*)டென்னிஸ் காம்டன் 7 பவுண்டரிகள்.
உபரி ரன்கள் 17
இந்திய டீமிற்கு வெற்றி பெற இலக்கு 278 ரன்கள்.அந்த கால கட்டத்தில் குறுகிய நேரத்தில் இவ்வளவு ரன்கள் குவிப்பது இயலாதது என்று நினைத்த இங்கிலாந்து டீம், இந்திய வீரர்களை அவுட் செய்து வெற்றி பெரும் முனைப்பில் இருந்தனர்.
இந்திய டீம் பவுலிங்
லாலா அமர்நாத் 3 - 71
வினு மன்காட் 2 - 45
இந்திய டீமின் இரண்டாவது இன்னிங்ஸ் துவக்கம் படு மோசம். டீமின் ஸ்கோர் 5 ரன்கள் எடுப்பதற்குள், முதல் மூன்று வீரர்கள் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பி விட்டனர்.
விஜய் மர்சன்ட் (0)
முஷ்டாக் அலி (1)
கேப்டன் பட்டோடி (4)
பொல்லார்ட் இரண்டு, பெட்ஸர் ஒரு , விக்கெட்டுக்களை கைப் பற்றினார்கள்.
0 - 1
3 - 2
5 - 3
அடுத்த இரண்டு வீரர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் ஆடினார் கள்.
ருசி மோடி (30)
விஜய் ஹாசரே (44)
76 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து விழுந்த ஆறு விக்கெட்டுக்களையும் தனது தலை சிறந்த பவு லிங்கால் வீழ்த்தியவர் அலெக் பெட்ஸர்.
ஹாசரே அவுட்.
79 - 4
ருசி மோடி அவுட்
84 - 5
அமர் நாத் (3) அவுட்
87 - 6
மன்காட் (5) அவுட்
113 - 7
அப்துல் கர்த்தார் (35) அவுட்
132 - 8
சந்து சர்வாத்தே (2) அவுட்
138 - 9
இங்கிலாந்து டீமிற்கும் வெற்றிக்கும் இடையில் இந்திய டீமின் ஒரே ஒரு விக்கெட் நின்று கொண்டு இருந்தது.நேரம் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருந்தது.கடைசி 13 நிமிடங்கள் திகில் நிறைந்ததாக நிரம்பி இருந்தது.
இங்கிலாந்து டீமின் அலெக் பெட்ஸர், அபார பந்து வீச்சு அவர்களுக்கு வெற்றி பெரும் நம்பிக்கையை அளித்தது.நிமிடங்கள் கரைந்துக் கொண்டு இருந்தன.இரண்டு டீம் வீரர்கள் மத்தியில் படபடப்பு.இன்னும் ஒரே ஒரு விக்கெட் தேவை.
கடைசி விக்கெட் ஜோடி இந்திய டீம் வீரர்கள் ரங்கா சோஹோனி, ஹிந்த்லேகர் பதட்டப்படாமல் எதிர் டீமின் பவுலர்கள் வீசிய பந்துக்களை லகுவாக தடுத்து ஆடியும், இடை இடையே ரன்கள் எடுத்தும் மேட்ச் முடியும் வரையில் நின்று ஆடி இங்கிலாந்து டீமின் வெற்றி அடைவதை தவிர்த்தனர்.
இந்திய டீமின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 9 விக்கெடுக்கள் இழப்பிற்கு 152 ரன்கள்.
இங்கிலாந்து டீம் பவுலிங்
பில் வாய்ஸ் 0 - 2
டிக் பெட்ஸர் 2 - 63
அலெக் பெட்ஸர்
25 ஓவர்கள்
4. மெய்டன்கள்
52 ரன்கள்
7 விக்கெடுக்கள்
இறுதி வரை பர பரப்புடன் நகர்ந்த இந்த டெஸ்ட் மேட்ச் ட்ராவில்
முடிவடைந்தது.
வாசுதேவன், பெங்களூரு