For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியை வீழ்த்த அந்த சிம்பிள் ப்ளான் போதும்.. பகிரங்க சவால் விடுத்த ராபின்சன் - முழு விவரம்!

ஹெட்டிங்லி: உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலியை விக்கெட் எடுப்பதற்கு எளிமையான திட்டம் ஒன்று போதும் என இங்கி, வீரர் ராபின்சன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

Recommended Video

England beat India by an innings and 76 runs at Headingley | IND vs ENG 3rd Test | OneIndia Tamil

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1 - 1 என சமனில் உள்ளது.

ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சொதப்பல்

சொதப்பல்

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 78/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 19 ரன்கள் அடித்தார். விராட் கோலி, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே ஆகியோர் மீண்டும் ஏமாற்றினர்.

குவிந்த ரன்கள்

குவிந்த ரன்கள்

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதனால் முதல் இன்னிங்ஸின் இறுதியில் அந்த அணி 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் ஸ்கோரை சமன் செய்யவே 354 ரன்கள் தேவைப்பட்டதால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு சுருண்டது.

நாயகன்

நாயகன்

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் என 7 விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கோலிக்கான திட்டம்

கோலிக்கான திட்டம்

போட்டி முடிந்து பேட்டியளித்த ராபின்சன், உலகின் தலை சிறந்த வீரராக பார்க்கப்படும் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது மிக எளிது எனக்கூறினார். விராட் கோலி முதலில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். அதன்பின்னர் அவரது விக்கெட்டை வீழ்த்தியது மிக பெருமையாக கருதுகிறேன். கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது என்பது சுலபம்தான். கோலியை அடிக்க விட்டு பிறகு 4வது அல்லது 5வது ஸ்டம்பில் பந்து வீசினால் எட்ஜாகி ஆட்டமிழந்துவிடுவார் என்று திட்டமிட்டோம். அதனை அப்படியே நிறைவேற்றிக் கொடுத்தார் விராட் கோலி.

பெருமை கொண்ட ராபின்சன்

பெருமை கொண்ட ராபின்சன்

எனவே விராட் கோலிக்கு சற்று ரன்களை அடிக்கும் படி பந்துகளை வீசினால், அடுத்த பந்தில் எளிதாக விக்கெட் எடுத்துவிடலாம். உண்மையை கூற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி ஆட்டநாயகன் விருது பெற வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. அதை நான் இன்று அடைந்துள்ளேன்.

Story first published: Sunday, August 29, 2021, 16:39 [IST]
Other articles published on Aug 29, 2021
English summary
India vs England Test: Ollie Robinson have a simple Trick to get a Kohli's wicket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+