Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு பின்னாடி வந்தவர்.. அவரே இந்த ரெக்கார்டை பண்ணிட்டார்.. 5வது டெஸ்ட்டில் விக்கெட் நெருக்கடி

தரம்சாலா : இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை ஸ்பின்னராக கோலோச்சி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினை விட ஒரு படி முன்னே இருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய ஸ்பின்னர் நாதன் லியோன்.

இதுவரை நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் நாதன் லியோன் முதல் இடத்தில் இருக்கிறார். அஸ்வின் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அது மட்டுமின்றி ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அஸ்வினை விட கூடுதல் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் நாதன் லியோன்.

India vs England Test Ravichandran Ashwin need another 5 wicket haul to equal Nathan Lyon record


தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் மட்டும் இதுவரை 10 முறை 5 விக்கெட் ஹால் சாதனை படைத்து இருக்கிறார். அதே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அஸ்வின் இதுவரை 9 முறை மட்டுமே 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்டில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தினால் நாதன் லியோனை அதிக 5 விக்கெட் ஹால் சாதனையில் முந்த முடியும். மேலும், அதிக 5 விக்கெட் ஹால் சாதனை படைத்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை முந்த முடியும்.


சுழற் பந்துவீச்சு ஜாம்பவான்கள் முத்தையா முரளிதரன் - ஷேன் வார்னே இடையே எப்படி ஒரே காலகட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் போட்டி நிகழ்ந்ததோ அதே போன்ற ஒரு போட்டி அஸ்வின் - நாதன் லியோன் இடையே நடந்து கொண்டு இருக்கிறது. அதில் நாதன் லியோன் முன்னிலையில் இருக்கக் காரணமே அவர் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருப்பது தான்.

இருவருமே 2011இன் பிற்பகுதியில் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்கள். ஆனால், நாதன் லியோன் 128 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அஸ்வின் 99 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். அதே சமயம், நாதன் லியோன் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடி 527 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கும் நிலையில், அஸ்வின் அவரை விட 29 போட்டிகள் குறைவாக ஆடி 507 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

இருவரும் ஆடிய போட்டிகளின் வித்தியாசத்தை விட விக்கெட் வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் இருவரில் அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனினும், அவர் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற வேண்டும் என்றால் அஸ்வின் விரைவாக விக்கெட்கள் வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

Story first published: Monday, March 4, 2024, 17:29 [IST]
Other articles published on Mar 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+