Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எத்தனை முறை தான் முதுகில் குத்துவீங்க..? எவ்வளவு சதம் அடித்தாலும் வாய்ப்பு இல்லை.. சர்பிராஸ் சோகம்

மும்பை : இந்திய கிரிக்கெட் உலகில் அனைவரும் பார்த்து, இவருக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம்னு ஏங்குற வீரர் என்றால் அது சர்பிராஸ் கான் தான். ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. இந்திய அணிக்காக ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடியதில்லை. ஆனால் சர்பிராஸ் கானுக்கு இப்போதே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கடந்த 3 வருடங்களில்... தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும்... தொடர்ந்து செஞ்சுரிகளாக விளாசித்தள்ளும் இவர்... "இந்தியாவின் டான் பிராட்மேன்" போல 90+ ஆவரேஜில் பேட்டிங் ஆடி வருகிறார். இதனால்... இந்திய செலக்சன் டீமை மிகவும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்.

India vs England test - Sarfaraz khan again ignored for test squad

கடந்த 3 வருஷங்களாக இந்திய தேர்வுக்குழுவுக்கு... ரசிகர்கள், விமர்சகர்கள், ஊடகங்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் மற்றும் திட்டுகளை...இவரைப்போல் வேறு எவரும் வாங்கித்தந்தது இல்லை.

தற்போது ஸ்ரேயாஸ் ஐயர், கில் போனற நடுவரிசை வீரர்கள் டெஸ்டில் சரியாக விளையாடாத நிலையில், அந்த இடத்தில் சர்ஃபராஸ் கானை தேர்வு செய்ய வேண்டும் என்று பரவலான நெருக்கடியும் அழுத்தமும் தேர்வுக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் உப்புசப்பு இல்லாத காரணம் கூறி அவரை நிராகரித்து... அவரை விட சுமாராக ஆடும் பிளேயரை செலக்ட் பண்ணுகிறவர்கள்... இம்முறை என்ன நொண்டிச்சாக்கு கூறப் போகிறார்களோ..,?!

தற்போது கூட இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் களமிறங்கியுள்ள சர்பிராஸ் கான் 96 ரன்கள் அடித்து இருக்கிறார். அதற்கு முன்பு தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய சீனியர் அணிக்கு எதிராகவே 61 பந்தில் சதம் அடித்து இருந்தார். ஆனால் இப்போதும் கூட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சர்பிராஸ் கான் சேர்க்கப்படவில்லை. இதனால் ரசிகர்களே கடுப்பாகி, பிசிசிஐயையும் தேர்வுக்குழுவினரையும் வெளுத்து வாங்குகிறார்கள்.

Story first published: Saturday, January 13, 2024, 17:05 [IST]
Other articles published on Jan 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+