Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கனவு நிஜமானது.. 3வது டெஸ்ட்டில் அறிமுகமாகும் சர்பிராஸ் கான்.. யாருக்கு பதிலாக தெரியுமா?

மும்பை :இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர இளம் கிரிக்கெட் வீரர் சர்பிராஸ் கான் அறிமுகமாக உள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்காட்டில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு தான் தேர்வு குழு இந்திய அணி அறிவித்தது. இந்த நிலையில் கடைசி மூன்று போட்டிகளுக்கான அணியில் சர்பிராஸ் கான் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

India vs England test - Sarfaraz khan is all set to play in rajkot test for this reason

ஏனென்றால் விராட் கோலி போன்ற ஸ்டார் வீரர்கள் அணிக்கு திரும்பினால் சர்பிராஸ் கானுக்கு இடமே கிடைக்காது என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசையில் களமிறங்கி விளையாடும் ஸ்ரேயாஸ் முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்றும் இதன் காரணம் காட்டி அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதேபோன்று கே எல் ராகுல் இன்னும் 100 சதவீதம் உடல் தகுதியை பெறவில்லை. இதனால் விராட் கோலி அணிக்கு திரும்பினாலும் கூட சர்பிராஸ் பிளேயிங் லெவனனில் மூன்றாவது டெஸ்டில் களமிறங்க 100% வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதேபோன்று கே எஸ் பரத் பேட்டிங் செய்ய தடுமாறி வருகிறார். இதனால் அவருக்கு பதில் துருவ் ஜூரல் களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவது டெஸ்டில் மாற்று வீரராக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட சர்பிராஸ் கான் பிளேயிங் லெவனின் களமிறங்காமல் இருந்தார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் காயம் ஏற்பட்டு வெளியேறி இருப்பதால் சர்பிராஸ்க்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு அவர் பெரிய சதம் அடித்தால் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று மூன்றாவது டெஸ்டில் அறிவிக்கப்படும் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, February 9, 2024, 20:31 [IST]
Other articles published on Feb 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+