இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. ஆண்டர்சன் இருக்காரா? 3 பேர் அறிமுகம்
லண்டன் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக திரும்பி இருக்கிறார். ஸ்டோக்ஸ் தற்போது தன்னுடைய முட்டி பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்.

இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால் ஸ்டோக்ஸ் முழு உடல் தகுதி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 16 பேர் கொண்ட இந்த அணியில் மூன்று அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் அனைவரின் கவனத்தையுமே ஈர்த்து இருப்பவர் சோயுப் பஷீர் என்ற 20 வயது ஆப் ஸ்பின்னர் தான். இவர் இதுவரை ஆறு உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதில் மொத்தம் பத்து விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று 6.3 அடி உயரத்தில் உள்ள இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கெஸ் அடிங்சன் ஆகியோருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரேகான் அகமதுக்கும் இந்தியா டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய தொடரில் இடம்பெற்றிருக்கிறார்கள். இதேபோன்று நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். இதில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதேபோன்று ஆலிவ் ராபின்சன், மார்க் வுட் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
எனினும் கிறிஸ் வொக்ஸ் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை. ஆசஸ் தொடரில் இடம் பெற்றிருந்தான் லாரன்ஸ், லியாம் டாவ்சன், வில் ஜாக்ஸ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் இங்கிலாந்து அணி துபாயில் சென்று பயிற்சி முகாமில் பங்கேற்று பின்னர் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு ஹைதராபாத் வந்து அடைகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் அணி : 1, பென் ஸ்டோக்ஸ் ( கேப்டன்), ரேஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன்,கெஸ் அட்கின்சன், ஜானி பாரிஸ்டோ, சோயிப் பஷிர், ஹாரி புருக், ஷாக் கிராலி, பென் டக்கட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட்
Story first published: Monday, December 11, 2023, 20:05 [IST]
Other articles published on Dec 11, 2023


Click it and Unblock the Notifications