Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG - இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு.. அணிக்கு திரும்பிய ஆல் - ரவுண்டர்.. முழு அணி விவரம்

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆட உள்ள நிலையில் அதற்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி மட்டும் இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சுழற் பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

அதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் நீண்ட இடைவெளிக்கு பின் அக்சர் படேல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கிறார். அவர் ஆல் - ரவுண்டரும் ஆவார். அவரைத் தவிர்த்து ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற் பந்துவீச்சாளர்களாக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

India vs England Test Series : Indian cricket team squad announced for England test series

விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அணியில் இடம் பெறவில்லை. அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன் தாமாக அணியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. முதன்மை விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் இடம் பெற்றுள்ளார். மாற்று விக்கெட் கீப்பர்களாக கே எஸ் பாரத் மற்றும் துருவ ஜுரேல் என இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் அணியில் இடம் பெற்றுள்ளனர். பேட்டிங்கில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றுள்ளனர். கே எல் ராகுலும் முக்கிய பேட்ஸ்மேனாக இடம் பெறுவார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி -

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான்

Story first published: Friday, January 12, 2024, 23:17 [IST]
Other articles published on Jan 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+