Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG : இதை மட்டும் செய்தால் அஸ்வின் கதை முடிந்தது.. புட்டு புட்டு வைத்த கெவின் பீட்டர்சன்

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சில் எப்படி எளிதாக ஃபோர், சிக்ஸ் அடிக்கலாம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கூறி இருக்கிறார்.

இங்கிலாந்து அணி, இந்திய மண்ணில் ஒரே ஒரு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. அந்த தொடரின் போது இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கெவின் பீட்டர்சன் பெரிய அளவில் கை கொடுத்தார். குறிப்பாக மும்பையில் நடந்த டெஸ்ட்டில் அவர் 186 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் அஸ்வின் பந்துவீச்சை அவர் குறி வைத்து ரன் குவித்தார்.

India vs England Test Series : Kevin Pietersen reveals how to play Ravichandran Ashwin

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரில் ஆட இருக்கும் நிலையில், அஸ்வினை எப்படி எதிர்கொள்வது என்றும், ஜடேஜா பந்துவீச்சில் எப்படி கவனமாக ஆட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார் கெவின் பீட்டர்சன். அஸ்வினின் பந்தில் எப்படி எளிதாக பவுண்டரி அடிப்பது என்ற ரகசியம் ஒன்றையும் உடைத்துக் கூறி இருக்கிறார்.

"நான் அப்போது அஸ்வினின் தூஸ்ரா வகை பந்துகளை தேர்வு செய்து அடித்தேன். அவர் தூஸ்ரா வீசப் போகிறார் என்றால் பந்து வீச ஓடி வரும் முன்பே தூஸ்ரா வீசுவதற்கு ஏற்ற வகையில் தன் கையில் பந்தை பிடித்துக் கொள்வார். அவர் இப்போதும் அப்படித் தான் செய்கிறார் என நினைக்கிறேன். அவர் மற்ற ஆஃப் ஸ்பின்னர்கள் போல ஓடி வரும் போது தூஸ்ரா வீசுவதற்காக பந்தை பிடிப்பதில்லை. அவர் அதை செய்ய மாட்டார். அவர் ஓடி வரும் முன்பே பந்தை கை விரல்களில் பிடித்து விடுவார்." என்றார் கெவின் பீட்டர்சன்.

மேலும், "அஸ்வின் பந்து வீசும் போது நான் 100 சதவீதம் உறுதியாக இருப்பேன். நான் அவரை எத்தனை முறை ஆஃப் சைடில் அடித்து இருப்பேன் என்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். அஸ்வின் தூஸ்ரா வீசப் போகிறார் என்பதை நான் அவர் பந்து வீச தயார் ஆகும் போதே கவனித்து விடுவேன். ஏனெனில், அவர் அப்போது லெக் திசையில் பீல்டிங்கை பலமாக நிற்க வைப்பார். பந்து திரும்பும் என்பதால் அப்படி செய்வார். நான் அதைப் பார்த்து கண்டுபிடித்து, ஃபோர் அல்லது சிக்ஸ் அடிக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன்" என்று கூறி இருக்கிறார் கெவின் பீட்டர்சன்.

அடுத்து ஜடேஜா பந்துவீச்சு குறித்து பேசிய பீட்டர்சன், அவர் பந்துகள் திரும்பாது ஆனால் சில சமயம், சறுக்கிக் கொண்டு வரும். அப்போது ஃபிரன்ட் ஃபூட்டில் ஆடாமல் இருந்தாலே போதும் எனக் கூறி இருக்கிறார்.

Story first published: Saturday, January 20, 2024, 19:06 [IST]
Other articles published on Jan 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+