For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் பந்தே திரும்பினாலும், இந்திய ஆடுகளம் குறித்து புகார் கூற மாட்டோம்.. இங்கி, துணை கேப்டன் பேச்சு

மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் வரும் 25ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்தியா இந்த தொடரில் எந்த மாதிரியான ஆடுகளத்தை தயாரிக்கப் போகிறது என்பது தான் தற்போது அனைவரும் மத்தியிலும் கேள்வியாக இருக்கிறது. இந்தியா வெளிநாட்டுக்கு சென்றால் வேக பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படுவதால் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் வெளிநாட்டு அணிகளுக்கு வழங்க பிசிசிஐ ஆயத்தமாக வருகிறது.

India vs England test series - olie Pope says we wont complain on Pitches in india

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஆலிவ் போப், இந்திய ஆடுகளம் குறித்து பேசி இருக்கிறார். அதில் இந்த தொடர் நடைபெறும் போது வெளியிலிருந்து பல குரல்கள் வரலாம். ஆடுகளம் குறித்து பல காரசார விவாதங்கள் எழலாம். ஆனால் ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு அணிக்கும் ஒரே ஆடுகளம் தான் வழங்கப்படுகிறது.

எனவே ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்கள் அணியை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது ஆடுகளத்தில் பொருட்கள் கொஞ்சம் வைத்திருப்போம். இதன்மூலம் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருக்கும். இதே போல் இந்தியாவும் அவர்களுக்கு ஏற்றார்போர் ஆடுகளத்தை தயாரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

குறைந்த ஸ்கோர் அடிக்கப்படும் டெஸ்ட் கிரிக்கெட் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கிறது. தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியை பார்த்தேன். அது பார்ப்பதற்கு ஆர்வத்தை தூண்டியது. ரன்கள் சேர்க்க பேட்ஸ்மேன்கள் கடுமையாக தடுமாறினார்கள். பந்து அங்கேயும் இங்கேயும் பறந்தது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்பட்டால் அதே போல ஒரு ஸ்கோர் தான் இந்திய ஆடுகளிலும் எடுக்க முடியும் .

முதல் பந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்பினாலும் நாங்கள் ஆடுகளம் குறித்து எந்த புகாரையும் கூற மாட்டோம். அதற்கு பதில் இந்தியா கொடுக்கும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வழியை தான் நாங்கள் கண்டுபிடிப்போம். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடரில் ரோஹித் சர்மாவும், ரிஷப் பண்டும் இங்கிலாந்தின் சிறப்பாக விளையாடினார்கள்.அவர்கள் அதிகமாக சிங்கிள்ஸ் எடுக்கவே இல்லை.

அது போன்ற ஆடுகளத்தில் அப்படி விளையாடுவது நிச்சயம் கடினமாகும். இதேபோல் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பந்தை தடுத்தால் மட்டும் போதாது. பவுண்டரி சிக்ஸர் என்று அடித்து ஆட வேண்டும். ஒவ்வொரு பேட்ஸ்மேன் தொடக்கத்திலும் கடும் சவால்களை நாம் கொடுத்து நெருக்கடியை உண்டாக்க வேண்டும். ஒவ்வொரு புது பேட்ஸ்மேனுக்கும் நாம் அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இதுதான் எங்களுடைய பிளான் ஆக இருக்கிறது என்று ஆலிவ் போப் கூறினார்.

Story first published: Saturday, January 13, 2024, 18:18 [IST]
Other articles published on Jan 13, 2024
English summary
India vs England test series - olie Pope says we wont complain on Pitches in india முதல் பந்தே திரும்பினாலும், இந்திய ஆடுகளம் குறித்து புகார் கூற மாட்டோம்.. இங்கி, துணை கேப்டன் பேச்சு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+