Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடக்கமே இப்படி ஒரு பின்னடைவு.. இங்கிலாந்து டெஸ்டை வெல்வது கடினம் தான்.. இந்திய அணிக்கு உருவான சவால்

லெய்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கமே பின்னடைவாக மாறியுள்ளது.

இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

இதற்காக அனைத்து வீரர்களும் இங்கிலாந்து சென்றடைந்து தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கி, டெஸ்ட் போட்டி

இங்கி, டெஸ்ட் போட்டி

கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என இந்திய அணி முன்னிலை வகித்தது. எனினும் கொரோனா காரணமாக 5வது போட்டி ஒத்திவைக்கப்பட்டதால், அந்த போட்டி மட்டும் தற்போது நடைபெறுகிறது. எனவே இதில் வெற்றி பெற்றால் தான் தொடரின் வெற்றியாளர் ஆக முடியும். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளும் அதிகரிக்கும்.

பயிற்சி போட்டி

பயிற்சி போட்டி

இந்திய அணி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக டெஸ்ட் போட்டியில் விளையாடவே இல்லை. இங்கிலாந்து பிட்ச் குறித்தும் புரிதல் இல்லை. எனவே கவுண்டி அணியுடன் இந்தியாவுக்கு பயிற்சி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 24ம் தேதி முதல் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்காக பயிற்சி போட்டியிலேயே இந்திய அணி முழு பலத்தையும் களமிறக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 திடீர் பின்னடைவு

திடீர் பின்னடைவு

இந்நிலையில் தான் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கவுண்டி அணியுடனான போட்டியில் 4 நாட்களுமே மழைக்கு வாய்ப்புள்ளது. போட்டி நடைபெறும் லெய்செஸ்டர் நகரத்தில் 24ம் தேதி முதல் கடும் மழை பொழியவுள்ளதாகவும், போட்டி ரத்து செய்யப்படலாம் எனவும் அறிக்கை விடப்பட்டுள்ளது.

பயிற்சி நிச்சயம் தேவை

பயிற்சி நிச்சயம் தேவை

பயிற்சி இன்றி இங்கிலாந்து அணியை சமாளிப்பது மிக கடினமான ஒன்றாகும். கடந்தாண்டை விட இங்கிலாந்து மிகவும் பலமாக உள்ளது. பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் நியூசிலாந்தை பந்தாடியது. இதே போல, ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்தியாவுக்கு பயிற்சி கண்டிப்பாக தேவை.

Story first published: Wednesday, June 22, 2022, 17:07 [IST]
Other articles published on Jun 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+