Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனியாரிட்டியை கைவிடுங்கள்.. 4வது டெஸ்டில் அந்த வீரர் நிச்சயம் வேண்டும்.. கோலிக்கு குவியும் அட்வைஸ்!

ஹெட்டிங்லி: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒரு வீரரை தூக்கிவிட்டு, கண்டிப்பாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1 - 1 என சமனில் உள்ளது.

ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சொதப்பல்

சொதப்பல்

இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 78/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 19 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே ஆகியோர் மீண்டும் ஏமாற்றினர்.

எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

இந்திய அணியில் தற்போது ஓப்பனிங் ஜோடியான ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் மட்டுமே முழு ஃபார்மில் உள்ளனர். மிடில் ஆர்டரின் சொதப்பல் மட்டுமே இரு இன்னிங்ஸிலும் மோசமான ரன்களுக்கு காரணமாக அமைந்தது. இதனை கேப்டன் விராட் கோலியே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார். இதுமட்டுமல்லாமல், சுழற்சி முறையில் ப்ளேயிங் 11ஐ உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் ஒரு அணி நீண்டுவிட்டது என ஆதங்கம் தெரிவித்திருந்தார். எனவே அடுத்தப்போட்டியில் நிச்சயம் பேட்டிங், பவுலிங் என மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யகுமார் வேண்டும்

சூர்யகுமார் வேண்டும்

இந்நிலையில் இந்திய அணியில் என்ன மாற்றம் வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார் பேசியுள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த போட்டிக்கு முன்னதாக நமது பேட்டிங் ஆர்டரை நிச்சயம் வலுப்படுத்தியாக வேண்டும். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவிற்கு இடம் கொடுக்க வேண்டும்.

 முன்னுரிமை

முன்னுரிமை

பேட்டிங்கில் அடுத்தபடியாக ஹனுமா விஹாரி உள்ளார். ஆனால் விஹாரியை விட சூர்யகுமார் யாதவிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஒரு பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்குவதே இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும். அஸ்வினுக்கு அணியில் இடம் கொடுக்கப்படாததையே என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்த போட்டிகளுக்கான இந்திய அணி 6 பேட்ஸ்மேன் மற்றும் 4 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர்களின் அறிவுரையை ஏற்றுக் கோலி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Monday, August 30, 2021, 8:10 [IST]
Other articles published on Aug 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+