For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது உங்களுக்கு தேவையா?? ஜோ ரூட்டை காப்பி அடித்த விராட் கோலி.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டின் டெக்னிக்கை விராட் கோலி காப்பி அடிக்க முயன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தின் கவுண்டி அணியுடன் பயிற்சி போட்டியில் ஈடுபட்டுள்ளது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 246 /8 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 33 ரன்களுக்கெல்லாம் அவுட்டானார். ஆனால் அவரின் விக்கெட் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்றிய விராட் கோலி

ஏமாற்றிய விராட் கோலி

இந்நிலையில் இந்த போட்டியில் கோலியின் பேட்டிங் பெரியளவில் இல்லையென்றாலும், அவர் செய்த செயல்கள் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக ஜோ ரூட் செய்த ஒரு மேஜிக்கை கோலியும் முயற்சி செய்திருந்தார்.

ஜோ ரூட் மேஜிக்

ஜோ ரூட் மேஜிக்

நியூசிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜோ ரூட், தனது பேட்டை எந்தவித பேலன்ஸும் இன்றி தரையில் நிற்க வைத்துவிட்டார். ரன் ஓடுகையில் மட்டும் அவர் பேட்டை எடுத்துக்கொண்டு சென்றார். எப்படி ஒரு பேட் தானாக நின்றுக்கொண்டிருக்கிறது என ரசிகர்கள் புரியாமல் குழம்பியிருந்தனர்.

விராட் கோலி முயற்சி

விராட் கோலி முயற்சி

இதே போன்று விராட் கோலியும் பேட்டை நிற்கவைத்து பார்க்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனையடுத்து சிரித்துக்கொண்டே அவர் நகர்ந்து சென்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Friday, June 24, 2022, 20:36 [IST]
Other articles published on Jun 24, 2022
English summary
virat kohli Copied the Joe root's majic ( ஜோ ரூட்டின் மேஜிக்கை காப்பி அடித்த விராட் கோலி ) இந்திய அணியின் பயிற்சி போட்டியில் விராட் கோலி செய்த ஒரு விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+