ராஞ்சி : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் அபாரமாக விளையாடி 90 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அருகே வரை வந்தது.
துருவ் ஜூரலின் இந்த இன்னிங்ஸ் இந்தியாவை காப்பாற்றி இருந்தாலும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் துருவ் ஜூரலை பாராட்டியும், சர்பராஸ் கானை மறைமுகமாக விமர்சித்தும் இருந்தார்.

இதற்கு காரணம் கடந்த ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ்கான் இருவரும் அறிமுகமானார்கள். எனினும் நீண்ட ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு அணிக்கு வந்ததால் அவருடைய வருகையை ரசிகர்கள் பெருமளவு கொண்டாடினர். மேலும் சர்பராஸ் கான் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய தந்தையை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் தன்னுடைய மகன் இந்தியாவுக்காக விளையாடுகிறார் என்பதை தந்தையும் தொப்பியை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால் இது சிலருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் ரோகித் சர்மா, கில் , ரஜத் பட்டிதார், ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் சர்பராஸ் கானும் 14 ரன்களில் வெளியேறினார்.இந்த நிலையில் ஷேவாக் மறைமுகமாக சர்பராஸ் கானை விமர்சிக்கும் வகையில், ஊடக வெளிச்சம் இல்லை! எந்த டிராமாவும் இல்லை !
வெறும் திறமை மட்டும் தான் இருக்கிறது. தன்னுடைய திறமையையும், பொறுமையையும் நெருக்கடியான கட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். துருவ் ஜூரலுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று ஷேவாக் கூறியிருந்தார். இந்த நிலையில் ஷேவாக்கின் இந்த ட்வீட் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. சர்பராஸ் காணை விமர்சிக்கும் விதமாக ஏன் இவ்வாறு ட்வீட் போட்டு உள்ளீர்கள் என பலரும் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
சர்பராஸ் காணும் ஒரு இந்தியர் தானே என்று பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள்.மேலும் சிலர் சேவாக்கிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு ட்வீட்டை எதிர்பார்க்கவில்லை என்றும், பொறுப்புள்ள நபராக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் அறிவுரை வழங்கி இருந்தார்கள். இந்த நிலையில் ரசிகர்களிடம் அடி வாங்குகிறோம் என்பதை உணர்ந்த சேவாக் மீண்டும் ஒரு விளக்கத்தை அளித்திருந்தார்.
அதில் நான் யாரையும் விமர்சிக்கவோ! அசிங்கப்படுத்தவோ இல்லை.
என்னை பொறுத்தவரையில் வீரர்களின் திறமையை வைத்து தான் அனைவருக்கும் சரிசமமான ஊடக வெளிச்சம் விழ வேண்டும். சில வீரர்கள் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார்கள். சில வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை யாரும் பெரும் அளவில் பாராட்டுவது இல்லை. இன்றைய டெஸ்டில் ஆகாஷ் தீப் சூப்பராக விளையாடினார். ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே சிறந்து விளையாடுகிறார்.
சர்பராஸ் ராஜ்காட்டில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தினார். துருவ் ஜூரல் தமக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாம் நன்றாக பயன்படுத்திருக்கிறார். ஆனால் இவர்களுக்கு ஊடக வெளிச்சம் கொடுக்கப்படவில்லை என்று கூறி சமாளித்து இருக்கிறார்.மேலும் குல்திப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் அவருக்கு ஆன்லைனில் ரசிகர்களை கிடையாது என்றும் சேவாக் குறிப்பிட்டு இருக்கிறார். சர்பராஸ் கானை மறைமுகமாக விமர்சித்து விட்டு பின் சிக்கிவிட்டோம் எனத் தெரிந்து சேவாக் அதனை சமாளிக்கும் விதமாக ட்வீட் போட்டு இருந்தார்.