IND vs ENG - இந்திய அணியில் 11 பேருமே அறிமுக வீரர்கள்.. வரலாற்றின் முதல் டெஸ்ட் என்ன நடந்தது?
லண்டன் : இந்திய கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில், இந்த மூன்று நாள்டெஸ்ட் சரித்திரம் படைத்தது. இதில் விளையாடிய இந்திய டீமின் 11 வீரர்களும் , டெஸ்ட் அறிமுக வீரர்கள், இந்த டெஸ்டில் தான்.
இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு அறிமுக ஆட்டக் காரர். ( பில் போவ்ஸ் )
ஆம். இது தான் இந்திய டீமின் முதல் அதிகார பூர்வமான டெஸ்ட் மேட்ச்.
வருடம் 1932.இந்திய கிரிக்கெட் டீம் ஒரே ஒரு டெஸ்ட் ஆட இங்கிலா ந்துக்கு பயணம் செய்தது.இந்திய டீமின் கேப்டன் சி கே நாயுடு, இந்த டெஸ்டில்.

இங்கிலாந்து டீமின் கேப்டன் டாக்லஸ் ஜார்டின் (Douglas Jardine )ஆம். பாடி லையன் தொடரின் ( Body Line Series ) கேப்டன் ஆக இருந்தவரே.இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் 25- 28, ஜூன் 1932 ல் நடைப் பெற்றது.டாஸ் வென்ற
இங்கிலாந்து டீம், முதலில் பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து டீமில் இரண்டு வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர் .
கேப்டன் டாக்லஸ் ஜார்டின் 79 ரன்கள்.நாயுடுவின் பவுலிங்கில் கேட்ச் பிடித்தது
நாவ்லே.லீஸ் அம்ஸ் ( Les Ames ) 65 ரன்கள். நிஸ்ஸார் ( Nisaar ) விக்கெட் எடுத்த பவுலர்.
இங்கிலாந்து டீம் ஆல் அவுட் 259
பவுலிங்கில் இந்திய டீமின் முஹம்மது நிஸ்ஸார் 93 ரன்கள் கொடுத்து 5 விக்கெடுக்கள் வீழ்த்தினார்.அமர் சிங் 2 - 75 , சி கே நாயுடு 2 - 40 இந்திய டீம் முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட்டுக்கள் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்தனர்.
அடுத்த தினம் ஓ ய் வு தினம் ( Rest Day)
27, ஜூன், 1932 இந்திய டீம் தங்களது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்தது.
இந்திய டீமின் பேட்டிங் எதிர் பார்த்தப்படி அமையவில்லை. இடை இடையே விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன. இந்திய டீமில் அதிகமான ரன்கள் எடுத்தவர் கேப்டன் சி கே நாயுடு (40)
நாமல் ஜெூமல் ( 33 )
இந்திய டீம் ஆல் அவுட் 189 இங்கிலாந்து டீமின் பவுலர்கள் பில் போவ்ஸ் ( 4 - 49 ) பில் ஓஸ் ( 3 - 23 ) சிறப்பாக பந்து வீசினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து டீம் , இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து இருந்தனர்.இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து டீம் 8 விக்கெட்டுக் கள் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தனர்.
அவர்கள் டீம் கேப்டன்
டாக்லஸ் ஜார்டின் 85*
எட்டி பயன்டர் (Eddie Paynter ) 54 ரன்கள் அடித்தனர்.
இந்திய டீமின் ஜஹான்கிர் கான் ( 4 - 60 ) அமர் சிங் ( 2 - 84 )
346 ரன்கள் இலக்கை அடைய வேண்டியிருந்த இந்திய டீமின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் சோபிக்கவில்லை.விக்கெட்டுக்களை இழந்த வண்ணம் இருந்தனர்.
முன்னிலை பேட்ஸ் மேன் அவ்வளவாக ஸ்கோர் செய்யவில்லை.அமர் சிங், லால் சிங் ஜோடி சேர்ந்து அதிக பட்ச ரன்களை ( 74 ) குவித்தனர்.
108 - 7 ரன்களிலிருந்து, 182 - 8 வரை உயர்த்தினர்.இந்திய டீம் இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட் 187அமர் சிங் (51) ஸயீத் வாசிர் அலி ( 39 ) லால் சிங் ( 29 ) ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து டீம் பவுலிங்கில் விக்கெட்டுக்கள் எடுத்தவர்கள்
பில் போவ்ஸ் (2 - 30)
பில் ஓஸ் ( 2 - 28 )
பிரௌன் (2 - 54 )
வால்லி
ஹம்மோன்ட் (3 - 9)
இங்கிலாந்து டீம் 158 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர்
இந்த டெஸ்ட் விளையாடுவதற்கு முன்பே கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில், 215 டெஸ்டுகளுக்கு மேலாக விளையாட பட்டு இருந்தன.
இந்திய டீமில் முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய பெருமையும், அறிமுக டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெடுக்கள் வீழ்த்தி சாதித்தவரும் முஹம்மது
நிஸ்ஸார் ஆவார்.இவர் தான் இந்த துவக்க அறிமுக டெஸ்டில் இந்திய டீமின் சார்பாக முதல் பந்தை வீசினார்.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications