Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரம்பமே சரியில்ல.. இங்கிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டி.. மண்ணை கவ்விய மகளிர் இந்தியா

கவுகாத்தி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தானா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிக பட்சமாக டேமி பீமெளன்ட் 62, கேப்டன் ஹீதர் நைட் 40 ரன்களை எடுத்தனர்.

161 ரன்கள் வெற்றி இலக்கு

161 ரன்கள் வெற்றி இலக்கு

இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2, ஷிகா பாண்டே மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். தொடர்ந்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.

சொற்ப ரன்களில் அவுட்

சொற்ப ரன்களில் அவுட்

சீட்டுகட்டுகளை போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கேப்டன் ஸ்மிருதி மந்தானா (2), ஹர்லின் தியோல் (8), ஜெமியா ரோட்ரிகஸ் (2), மிதாலி ராஜ் (7), வேதா கிருஷ்ணமூர்த்தி (15), அருந்ததி ரெட்டி (18) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர்.

இந்தியா 115 ரன்களுக்கு அவுட்

இந்தியா 115 ரன்களுக்கு அவுட்

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி இப் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்தத் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.

தொடக்க வீராங்கனை ஏன்?

தொடக்க வீராங்கனை ஏன்?

குறிப்பாக, ஆல்ரவுண்டர் ஹர்லின் தியோல் மிடில் ஆர்டர் பிரிவில் பேட்டிங் செய்யவில்லை. வழக்கத்திற்கு மாறாக தொடக்க வீராங்கனையாக ஏன் களமிறங்கினார் என்பதே புரியாத புதிராக உள்ளது.

8 ரன்களில் ஏமாற்றம்

8 ரன்களில் ஏமாற்றம்

பவர்பிளே என்பதால், அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த தொடக்கவீராங்கனையாக களமிறங்கினார். முடிவில், அவர் ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்களில் திருப்திய அடைந்து நடையைக் கட்டியது பெருத்த ஏமாற்றம்.

2வது 20 ஓவர் போட்டி

2வது 20 ஓவர் போட்டி

இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மார்ச் 7ம் தேதி மீண்டும் கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. இதில், இந்திய அணி வெற்றிபெற்று தொடரை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Monday, March 4, 2019, 16:27 [IST]
Other articles published on Mar 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+