Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியல் - இங்கிலாந்தின் உதவியால் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்த இந்திய அணி

தரம்சாலா : 2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி பாதாளத்துக்கு சென்று இருக்கிறது. அதே சமயம், மோசமாக ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய அணி முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள பெரிய அளவில் உதவி செய்து இருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தினாலும் முதல் இடத்தை பிடிக்க முடியாது. இந்திய அணி இங்கிலாந்து தொடரில் நான்கு போட்டிகளை வென்றதால் கூடுதல் வெற்றி சதவீதத்தை பெற்று இருக்கிறது. இங்கிலாந்து அணியின் மோசமான ஆட்டத்தால் இந்தியா இந்த தொடரில் எளிதாக வெற்றி பெற்றது. எனவே, ஒரு வகையில் இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு உதவி செய்து இருக்கிறது.

India vs England WTC Points Table India at top as England stay low with eighth rank

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4 - 1 என வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 9 போட்டிகளில் 6 வெற்றிகள் ஒரு டிரா செய்து 68.51 வெற்றி சதவீதம் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி 10 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகள் மட்டுமே பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. தற்போது முதல் இடத்துக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 11 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகள், 1 டிரா உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் நிலையில் அதன் முடிவில் எந்த அணி வெற்றி பெற்றாலும் இந்திய அணியை முந்தி முதல் இடத்தை பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு இந்திய அணியின் வெற்றி சதவீதம் அதிகமாக உள்ளது.

2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் (இந்தியா - இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முடிவில்) :

1. இந்தியா - 68.51 வெற்றி சதவீதம்
2. நியூசிலாந்து - 60 வெற்றி சதவீதம்
3. ஆஸ்திரேலியா - 59.09 வெற்றி சதவீதம்
4. வங்கதேசம் - 50 வெற்றி சதவீதம்
5. பாகிஸ்தான் - 36.66 வெற்றி சதவீதம்
6. வெஸ்ட் இண்டீஸ் - 33.33 வெற்றி சதவீதம்
7. தென்னாப்பிரிக்கா - 25 வெற்றி சதவீதம்
8. இங்கிலாந்து - 17.50 வெற்றி சதவீதம்
9. இலங்கை - 0 வெற்றி சதவீதம்

Story first published: Saturday, March 9, 2024, 15:22 [IST]
Other articles published on Mar 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+