Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பானிபூரி விற்ற பையனுக்கு வெளிநாட்டு காதலியா.. இந்திய வீரரை பார்த்து வயிறு எரிந்த ரசிகர்கள்

மும்பை : இந்திய அணி வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின், பெண் தோழி என ஒருவரின் புகைப்படம் ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் அன்று சமூக ஊடகங்களில் பரவியது. அந்தப் பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெய்ஸ்வால் பழகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய ரசிகர்கள் சிலர் மிக வெளிப்படையாக ஜெய்ஸ்வால் மீது பொறாமை கொண்டு அவரை திட்டியும், பானிபூரி விற்ற பையனுக்கு வெளிநாட்டு காதலியா? என தங்கள் மனக் குமுறலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

India vs England : Yashasvi Jaiswal girlfriend Maddie Hamilton picture creates a buzz

ஜெய்ஸ்வால் இன்று இந்திய டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியில் துவக்க வீரராக இருக்கிறார். ஆனால், அவர் கடந்து வந்த பாதை மிக மோசமானது. அவர் தந்தை மும்பையில் சாலை ஓரத்தில் சிறிய பானிபூரி கடை நடத்தி வருபவர். அவருக்கு உதவியாக ஜெய்ஸ்வாலும் அந்த பணியை செய்து வந்தார். இடையே கிளப் கிரிக்கெட் ஆடி வந்த அவர், பேட் மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் வாங்கவே போராடி பலரிடம் உதவி பெற்று, மும்பை மாநில அணியில் இடம் பெற்றார். பின்னர் ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற பின் அவர் வாழ்க்கை மாறியது.

இந்த நிலையில் தான் அவர் இங்கிலாந்தை சேர்ந்த மேடி ஹாமில்டன் என்ற பெண்ணுடன் பழகத் துவங்கி இருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இங்கே நீங்கள் பார்க்கும் புகைப்படத்தில் மேடி ஹாமில்டன் தாயாருடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டு இருக்கிறார் ஜெய்ஸ்வால். அந்த அளவுக்கு அவர்கள் குடும்பத்துடன் நெருக்கமாகி விட்டார்.

இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் மேடி ஹாமில்டன், ஜெய்ஸ்வாலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஹைதராபாத் மைதானத்துக்கு நேரில் வந்திருந்தார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் இந்திய டெஸ்ட் அணி உடையுடன் காணப்பட்டார். அந்த புகைப்படம் தான் சமூக ஊடகங்களில் பரவியது. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த புகைப்படத்தை பார்த்திருந்தனர். அவர்களில் சிலர் ஜெய்ஸ்வாலின் கடந்த காலத்துடன் ஒப்பிட்டு தங்கள் பொறாமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக சமீப காலமாக ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி வருகிறார். அதிரடி ஆட்டம் ஆடுவதை இயல்பாக கொண்ட அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும் அணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். முன்பு ஷிகர் தவான் இருந்த இடத்தில் ஜெய்ஸ்வால் சரியாக பொருந்திப் போகிறார் என்பதால் அவர் நீண்ட காலம் இந்திய அணியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, January 30, 2024, 18:01 [IST]
Other articles published on Jan 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+