ஆசிய கோப்பையில் இன்று இந்தியா, ஹாங்காங் மோதல்.. இந்திய அணியில் ஆடப் போவது யார் யார்?
துபாய் : ஆசிய கோப்பை போட்டியில் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்த ஒரு அலசல்
ஹாங்காங் அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசை பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு ஹாங்காங் பெரிய அளவில் அதிர்ச்சி அளிப்பதற்கான வாய்ப்புகள் குறைவே.

இந்திய அணியை பொறுத்தவரை இது அவர்களுக்கு ஒரு பயிற்சி ஆட்டம் போலத்தான். நாளை மறுதினம் இந்திய அணி, தனது முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. விராட் கோஹ்லி இல்லாத இந்திய அணி எவ்வாறு விளையாடப்போகிறது என்பதை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாங்காங் அணியை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் முனைப்புடன் உள்ளது.
இந்திய அணியின் நான்காம் நிலையில் யாரை களமிறக்குவது என்ற குழப்பமான நிலையில் தோனி களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அம்பத்தி ராயுடு மற்றும் கே எல் ராகுல் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அறிமுக வேகபந்துவீச்சாளர் கலீல் அஹமத் நாளைய போட்டியில் களமிறக்கப்படலாம்.
இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, September 18, 2018, 9:08 [IST]
Other articles published on Sep 18, 2018


Click it and Unblock the Notifications