For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs IRE 3rd T20 - மிரட்டும் வானிலை ! பிளேயிங் லெவனில் மாற்றம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

டுபிளின் : இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கை வென்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி சம்பிரதாய ஆட்டமாக தான் நடைபெறும். எனினும் அயர்லாந்துக்கு எதிராக இதுவரை இந்திய அணி தோற்றுது இல்லை என்ற சாதனையை தக்க வைத்துக் கொள்ள இந்திய வீரர்கள் போராடுவார்கள் என தெரிகிறது.

India vs ireland 3rd t20- changes in playing xi in dead rubber game

மேலும் இந்த தொடரில் வாய்ப்பே கிடைக்காத வீரர்களுக்கு இம்முறை பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கலாம் என பும்ரா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி சஞ்சு சம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் கலக்கிய ஜித்தேஸ் ஷர்மா சேர்க்கப்படுவார் என தெரிகிறது. ஜித்தேசஷ் தற்போது சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இதனால் அந்தத் தொடரில் விளையாடுவதற்கு ஏதுவாக ஜித்தேஷ் சர்மாவுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஆவேஷ் கான் கடந்த ஏழு டி20 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். இதனால் அவருக்கு இன்றைய ஆட்டத்தில் பும்ரா வாய்ப்பு கொடுப்பார் என நம்பப்படுகிறது.

India vs ireland 3rd t20- changes in playing xi in dead rubber game

இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் மாற்றம் நடக்கும் என தெரிகிறது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நம்பர் மூன்றாவது இடத்தில் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார்கள் என தெரிகிறது. வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் திறமையை பரிசோதிக்க இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனினும் ஆட்டமே பாதிக்கப்படும் அளவுக்கு மழை இருக்காது என்றும் முதல் டி20 போட்டி டக் வொர்த் லூயிஸ் விதி வேலையை காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்கும்.

Story first published: Wednesday, August 23, 2023, 8:40 [IST]
Other articles published on Aug 23, 2023
English summary
India vs ireland 3rd t20- changes in playing xi in dead rubber game IND vs IRE 3rd T20 - மிரட்டும் வானிலை ! பிளேயிங் லெவனில் மாற்றம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+