அஸ்வின் இப்படி பந்து வீசினால், நாங்கள் எப்படி ரன் எடுப்பது: அயர்லாந்து கேப்டன்
ஹாமில்டன்: அஸ்வின் இப்படி பந்து வீசினால் நாங்கள் எப்படி ரன் எடுப்பது என்று அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்டர்பீல்ட் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
இந்நிலையில் போட்டி குறித்து அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு கூறுகையில்,

அஸ்வின்
அஸ்வினின் பந்துவீச்சை சந்திப்பது சவாலாக இருந்தது. அவரது பந்துகளை நாங்கள் இன்னும் சற்று வேகத்துடன் அடித்திருக்க வேண்டும்.

விக்கெட்
முக்கியமான நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். 30வது ஓவரில் ஓரளவுக்கு சமாளித்து நாங்கள் வந்தோம். ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் தேறி வருகையில் விக்கெட்டை இழந்துவிடுகிறோம். அது தான் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

பலம்
இந்திய அணிக்கு பல பலங்கள் உள்ளது. அவர்களின் பேட்டிங்கை பார்க்க வேண்டுமே. மிடில் ஆர்டரிலும் போட்டியை காப்பாற்றும் வீரர்கள் அவர்களிடம் உள்ளனர்.

பந்துவீச்சு
அஸ்வின் மற்றும் பிற பந்து வீச்சாளர்கள் இறுதியில் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். இந்தியாவின் ஸ்பின்னர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.

பெரிய அணிகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் 8 முன்னணி அணிகளுக்கு எதிராக 9 ஓடிஐகளில் தான் விளையாடியுள்ளோம். அடிக்கடி முன்னணி அணிகளுடன் விளையாடியிருந்தால் அது எங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார் போர்டர்பீல்ட்.


Click it and Unblock the Notifications