Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - அயர்லாந்து தொடர்.. ஐபிஎல் முடிந்தவுடன் இந்திய அணி ஆடவுள்ள தொடர்கள் முழு அட்டவணை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு 2026 ஆம் ஆண்டில் ஓய்வே இல்லாத அளவிற்குப் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஐபிஎல் 2026 தொடர் மே 31 அன்று நிறைவடைந்த பிறகு, இந்திய அணி பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டும், இந்தியாவிலும் பல தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் குறிப்பாக இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்திய அணியின் அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்திய அணி அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி பெல்ஃபாஸ்ட் நகருக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். பால் ஸ்டிர்லிங் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் அயர்லாந்து அணி புதிய கேப்டனுடன் களமிறங்குகிறது.

India vs Ireland Cricket Schedule 2026 India to Tour Ireland for T20I Series Before England Challenge

அதேநேரம் இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிகளை முடித்துக்கொண்டு இந்திய அணி நேராக இங்கிலாந்து சென்று 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடரில் பங்கேற்கிறது.

அதற்கு முன்பாக ஜூன் மாதத் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை அணிக்கு எதிராக வெளிநாட்டில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. செப்டம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 டி20 போட்டிகளும், அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உள்ளூரில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

அக்டோபரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கப் போராடும். அதன் பின்னர் நியூசிலாந்துக்குச் செல்லும் இந்திய அணி அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கிறது. இறுதியாக டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு எதிராக இந்திய மண்ணில் தொடர் நடைபெறவுள்ளது. ஜூன் 2026 முதல் இந்திய அணி பங்கேற்க உள்ள கிரிக்கெட் தொடர்கள் -

ஜூன் 2026 (ஆப்கானிஸ்தான் தொடர் - இந்தியா)

ஜூன் 6 - 10: ஒரே ஒரு டெஸ்ட் போட்டி
ஜூன் 14: 1-வது ஒருநாள் போட்டி (ODI)
ஜூன் 17: 2-வது ஒருநாள் போட்டி (ODI)
ஜூன் 20: 3-வது ஒருநாள் போட்டி (ODI)

ஜூன் 2026 (அயர்லாந்து தொடர் - அயர்லாந்து)

ஜூன் 26: 1-வது டி20 போட்டி
ஜூன் 28: 2-வது டி20 போட்டி

ஜூலை 2026 (இங்கிலாந்து தொடர் - இங்கிலாந்து)

ஜூலை 1: 1-வது டி20 போட்டி
ஜூலை 4: 2-வது டி20 போட்டி
ஜூலை 7: 3-வது டி20 போட்டி
ஜூலை 9: 4-வது டி20 போட்டி
ஜூலை 11: 5-வது டி20 போட்டி
ஜூலை 14: 1-வது ஒருநாள் போட்டி (ODI)
ஜூலை 16: 2-வது ஒருநாள் போட்டி (ODI)
ஜூலை 19: 3-வது ஒருநாள் போட்டி (ODI)

ஆகஸ்ட் 2026 (இலங்கை தொடர் - இலங்கை)

ஆகஸ்ட் மாதம்: 2 டெஸ்ட் போட்டிகள்

செப்டம்பர் 2026 (ஆப்கானிஸ்தான் தொடர்)

செப்டம்பர் மாதம்: 3 டி20 போட்டிகள்

செப்டம்பர் - அக்டோபர் 2026 (வெஸ்ட் இண்டீஸ் தொடர் - இந்தியா)

3 ஒருநாள் போட்டிகள் (ODI)
5 டி20 போட்டிகள்

அக்டோபர் - நவம்பர் 2026 (நியூசிலாந்து தொடர் - நியூசிலாந்து)

2 டெஸ்ட் போட்டிகள்
3 ஒருநாள் போட்டிகள் (ODI)
5 டி20 போட்டிகள்

டிசம்பர் 2026 (இலங்கை தொடர் - இந்தியா)

3 ஒருநாள் போட்டிகள் (ODI)
3 டி20 போட்டிகள்

Story first published: Saturday, March 21, 2026, 11:47 [IST]
Other articles published on Mar 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+