
அயர்லாந்து போட்டி
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் என மூவருமே இங்கிலாந்து தொடரில் பிசியாக இருப்பதால், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல பயிற்சியாளர் டிராவிட் இங்கிலாந்தில் இருப்பதால், இந்த தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்படவிருக்கிறார்.

2 வீரர்கள் அறிமுகம்
இரு அணிகள் மோதும் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், ப்ளேயிங் 11 மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பேட்டிங்கில் பழைய ஃபார்முலா உள்ள சூழலில், பவுலிங் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் என 2 இளம் வீரர்கள் எண்ட்ரி கொடுக்கவுள்ளனர். இவர்கள் ஐபிஎல்-ல் கலக்கியவர்கள். இதற்காக தான் ஹர்திக் ஸ்பெஷல் ப்ளான் போட்டுள்ளார்.

புறக்கணித்த பண்ட்
தென்னாப்பிரிக்காவுடனான 5 போட்டிகளில் ஒருமுறை கூட இவர்கள் இருவருக்குமே டிராவிட் வாய்ப்பு தரவில்லை. ஒரே ப்ளேயிங் 11 உடன் களமிறங்க வேண்டும் என டிராவிட்டுடன் சேர்ந்து பண்ட்-ம் முடிவெடுத்தார். ஆனால் இதனை ஹர்திக் பாண்ட்யா - லக்ஷ்மண் ஜோடி உடைக்கவுள்ளனர்.

என்ன ஸ்பெஷல்
டெத் ஓவர்களில் பும்ராவுக்கு இணையாக பேசப்படுபவர் அர்ஷ்தீப் சிங். இதே போன்று மிடில் ஓவர்களில் உம்ரான் மாலிக்கின் வேகம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறது. எனவே இவர்களின் திறமையை சோதித்து பார்க்க பாண்ட்யா ஆர்வமாக உள்ளார். இதற்காக சீனியர் வீரர்களையே பெஞ்சில் உட்கார வைக்கவும் அவர் துணிந்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











